Politics
மதுரை AIIMS-ல் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன என்றே சொல்லியிருக்கலாமே?"- பாஜக நட்டாவை கலாய்த்த ப.சிதம்பரம்!
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 3 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து ஜே.பி நட்டா உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில், “சாவர்க்கர் புல்புல் பறவையில் வந்தது போல், ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம்.கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய தலைவர் பொய் சொல்வது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
தாங்கள் கூறிய பொய் வெளிவந்ததை அறிந்த பா.ஜ.க தாங்கள் ட்விட்டரில் பதிவிட்ட ஜே.பி. நட்டா தொடர்பான கருத்தை நீக்கியது. இந்த நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஜே.பி. நட்டாவின் கருத்தை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "மதுரை ஏய்ம்ஸ் (AIIMS)மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு.நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?. பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?.
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?. பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?." என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!