Politics
ரஷ்யா - உக்ரைன் போர்.. வடகொரியாவை தூண்டிவிட்ட அமெரிக்கா.. காட்டமான பதிலடி கொடுத்த வடகொரியா !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இந்த நிலையில், போரில் ரஷ்யாவுக்கு அணுஆயுதங்கள் கொடுத்து வடகொரியா உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வடகொரியா, அமெரிக்கா பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதை நிறுத்த வேண்டும். உக்ரைனில் ரஷ்யாவிற்கு எந்த ஆயுதங்களையும் நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. இனி அப்படி செய்யும் எந்த திட்டமும் இல்லை.
ஒருவேளை ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றமதி செய்ய நாங்கள் முடிவு செய்தாலும் கூட அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்' என்று வட கொரியா பதில் கூறியுள்ளது.
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!