Politics
உயர்ந்த ரூபிளின் மதிப்பு..அமெரிக்காவை திருப்பியடித்த புதினின் நடவடிக்கை..நடுவில் சிக்கிய ஐரோப்பிய நாடுகள்
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷ்ய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதை, ரஷ்ய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது.
அதன்பின்னர் உக்ரைன் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
இதில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களத்தில் குதித்தன. உக்ரைனுக்கு கணக்கில்லாத வகையில் ஆயுதங்கள் அனுப்பின. அதோடு ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை விதித்தன. மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் விதமாக 'ஸ்விஃப்ட் வங்கி' நடைமுறையிலிருந்து ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் நீக்கப்பட்டன. இதனால் உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்யமுடியாமல் ரஷ்யா முடக்கப்பட்டது.
இதனால் ரஷ்யாவின் நாணயமான ரூபிள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 75ல் இருந்து 132 ஆக சரிந்தது. இதன் காரணமாக இனி ரஷ்யா அவ்வளவுதான் எந்த பேச்சிகளும் எழுந்தது. மேலும், இதன் மூலம் ரஷ்யாவை அமெரிக்கா பழிவாங்குகிறது என்ற பேச்சும் எழுந்தது.
ஆனால், இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விஷயங்களை உடனடியாக செய்யத்தொடங்கினர் ரஷ்ய அதிபர் புதின். இனி ரஷ்யா டாலரில் வர்த்தகம் செய்யாது என அமெரிக்காவின் அடிமடியிலே கைவைத்தார் புதின். மேலும், நட்பல்லாத நாடுகள் இனி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், நட்பான நாடுகளுக்கு அந்தந்த நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யலாம் என்றும் அறிவித்தார். ரஷ்யாவின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை உடனடியாக பாதித்தது. ஐரோப்பிய நாடுகளின் 50 % கச்சா எண்ணெய் விநியோகம் ரஷ்யாவை நம்பியே இருந்ததால் அதன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு மாதத்திலேயே நல்ல பலனை கொடுத்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு உயர்த் தொடங்கியது. அதிலும், போருக்கு முந்தைய நிலையை விட நிலைக்கு வந்துள்ளது. போருக்கு முன்னர் 75-ஆக இருந்த ரூபிளின் மதிப்பு, தற்போது 60 என்ற நிலைக்கு வந்துள்ளது.
ஆனால், அதேநேரம் ஐரோப்பிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும், ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யா பயன்படுத்திய டாலரில் வர்த்தகம் கிடையாது என்ற நடைமுறையை அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும் பயன்படுத்தினால் அது அமெரிக்க பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்க அரசும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!