Politics
ராணி மரணத்தால் பிரிட்டனுக்கு எழுந்த சிக்கல்.. திருடப்பட்ட பொக்கிஷங்களை திரும்ப கேட்கும் தென்னாபிரிக்கா !
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அவரின் இறுதி சடங்கு நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதுமிலிருந்து 2000 உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். ராணியின் இறுதிப் பேரணியின்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் குழுமியிருந்தனர்.
அதேநேரம் ராணியின் மறைவைத் தொடர்ந்து பெரும் சிக்கலில் பிரிட்டன் சிக்கிக்கொண்டுள்ளது. பிரிட்டன் அரசரை ஏற்பதா அல்லது குடியாசராக மாறுவதா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்படும் என ஒரு காலத்தில் பிரிட்டன் வசம் இருந்த கரீபியன் நாடுகள் அறிவித்துள்ளன.
இது தவிர காலனியாதிக்கத்தின்போது பிரிட்டன் மற்றும் அரச குடும்பத்தினர் கொள்ளையடித்த பொக்கிஷங்களை அந்தந்த நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது. அரச குடும்பத்தின் பாரம்பரிய நகைகளில் ஒன்றான செங்கோலில் உள்ள வைரத்தை திருப்பி அளிக்குமாறு தென்னாப்பிரிக்காவில் குரல்கள் எழுந்துள்ளது.
ராணியின் செங்கோலில் 'கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா' என்றழைக்கப்படும் வைரக்கல் இடம்பெற்றுள்ளது. இந்த வைரக்கல் 1905-ல் தென் ஆப்பிரிக்காவின் வைரச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்கா பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திடம் அப்போதைய ஆட்சியாளர்களால் இந்த வைரம் ஒப்படைக்கப்பட்டது. இது தற்போது ராணியின் கிரீடத்தில் உள்ளது. இந்நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் குழுக்களும் இணைந்து ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கோரி வருகின்றனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!