Politics

"பாஜக பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம்.. ஆனால்" -மேற்குவங்க கலவரம் குறித்து மம்தா பேச்சு !

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜீ தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறு வருகிறது. இங்கு பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் து ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பாஜக அணிவகுப்பு நடத்தியது.

இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இதற்காக ஏழு ரயில்களை பாஜக வாடகைக்கு எடுத்தது. இந்த பேரணியின்போது பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலிஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

அப்போது பாஜக தொண்டர்கள் போலிஸார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும், காவல் நிலையம் அருகே இருந்த காவல்துறை வாகனம் பாஜகவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவினரை போலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், இந்த கலவரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வினர் பிரச்னையைத் தூண்டுவதற்காக வெளி மாநிலங்களிலிருந்து ரயில்களில் குண்டர்களை அழைத்து வந்ததிருக்கின்றனர். அந்த கும்பல் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறை நினைத்திருந்தால், தங்களைத் தற்காத்துக்கொள்ளத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம், ஆனால் எங்கள் நிர்வாகம் அதிகபட்ச நிதானத்தைக் காட்டியிருக்கிறது.

பாஜகவினர் மக்களின் சொத்துக்களை எரித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். குற்றவாளிகள் கைதுகள் செய்யப்படுகின்றனர், சட்டம் அதன் கடமையைச் செய்யும்." என்று கூறியுள்ளார்.

Also Read: "தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?