Politics
"காங்கிரஸ் வென்றால் ரூ.500-க்கு சிலிண்டர்.. இலவசக் கல்வி.." -ராகுல் காந்தி அளித்த வாக்குறுதிகள் என்னென்ன?
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிரதான கட்சிகள் நேரடியாக போட்டியிடவுள்ளது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பரிவர்த்தன் சங்கல்ப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். பின்னர் அவர் தொண்டர்களிடம் சிறப்புரை ஆற்றினார்.
ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் பேசினார். அவரளித்த வாக்குறுதிகள் பின்வருமாறு : "குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,
3000 ஆங்கில வழிப்பள்ளிக்கூடங்கள் உருவாக்கித் தரப்படும்,
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.5 கூடுதலாக மானியம் தரப்படும்.
ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தரப்படும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்
விவசாயிகளின் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்
அரசுப் பணிகளில் ஒப்பந்த முறை நிறுத்தப்படும் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும்.
ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சமையல் எரிவாயு, ரூ. 500-க்கு விற்கப்படும்
மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
- இவையனைத்தும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வடித்த பா.ஜ.க மோடி அரசு படேலுக்கு விரோதமாக நடந்துகொள்கிறது. விவசாயிகளை விடுத்து தொழிலதிபர்களுக்குதான் பா.ஜ.க அரசு கடன்தள்ளுபடி செய்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக இந்த நிலை மாறும்" என்று உறுதியளித்துள்ளார்.
Also Read
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!