Politics
ஆபரேஷன் தாமரை.. சிக்கிய கருப்பு ஆடு : பா.ஜ.கவின் சதியை நிதிஷ்குமார் முறியடித்தது எப்படி? - பீகார் Decode!
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பீகார் பா.ஜ.க கூட்டணி ஆட்சி முற்றிலும் முறிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டும் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி மீண்டும் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.கவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் 43 மற்றும் மற்றக் கூட்டணி கட்சிகள் 8 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கப்பட்டது.
எதிரணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர்.
இந்நிலையில் அதிக இடங்களை கைபற்றிய பா.ஜ.க முதலமைச்சர் பதவி வேண்டும் என அழுத்தம் கொடுத்தது. ஆனால் நிதிஷ்குமார் அனுமதிக்காததால் அவரையே முதல்வராக்க பா.ஜ.க ஒப்புக்கொண்டது. மேலும் துணை முதலமைச்சர் பதவி பா.ஜ.கவுக்கு கிடைத்தது.
இந்த பிரச்சனையில் இருந்து இரு கட்சிகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவந்தது. மேலும் நிதிஷ்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில், இந்த கூட்டணி விவகாரம் தற்போது பட்டவர்த்தமாக வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோனைக் கூட்டத்தில், பா.ஜ.க ஜே.டி.யூ ஆட்சியை முறித்துக்கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கவுள்ளதாக அறிவித்தார். அதன்படி இன்று ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் தலைமையில், பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
பா.ஜ.க கூட்டணி அமைக்கும் இடங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜ.க ஆட்சியை அமைப்பதே அவர்களையே வேலையாக இருந்த நிலையில், பா.ஜ.கவின் வியகத்தை முறியடித்து நிதிஷ்குமார் எடுத்த முயற்சிக்கு நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் பதவியேற்ற பின்னர் பேசிய நிதிஷ் குமார், "2020 தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சியினர் கொடுத்த அழுத்தத்தாலேயே முதல்வரானேன். ஆனால், கட்சியினர் முந்தையக் கூட்டணியில் என்ன மாதிரியாக ஒடுக்கப்பட்டனர் என்பதை நீங்களே பார்த்தீர்கள்.
நான் உங்கள் அனைவரிடமும் கடந்த இரண்டு மாதங்களாகவே பேசவில்லை. 2015-ல் நாம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இப்போது நாம் எந்த எண்ணிக்கையில் இருக்கிறோம் என்று பாருங்கள்" என்றார்.
எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல் மற்றும் பாஜகவின் அரசியல் வியூகத்தை சாடிப் பேசினார். முன்னதாக மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க சிவசேனா எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டேவை வைத்துஆட்சியை கவிழ்த்தது போல பீகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஆர்.சி.பி.சிங் என்பவரை வைத்து முயற்சித்ததாக கூறப்படுகிறது.
முதலமைச்சருக்கு தெரியாமல் ஆர்.சி.பி.சிங்கிற்கு அமைச்சரவையில் பதவி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது. மேலும் இதனை பெரிது படுத்தாமல் இருந்திருந்தால் அடுத்த ஓரிரு மாதங்கள் பீகாரில் ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க ஆட்சியை அமைத்திருக்கும் என்றுக் கூறப்படுகிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !