Politics

“அ.தி.மு.க ஆட்சியின் சீர்கேட்டினால்தான் கடன் சுமை அதிகரித்துள்ளது..” : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

கோவை கொடிசியா வளாகத்தில் ஆறாவது புத்தக கண்காட்சியினை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் புத்தக கண்காட்சியில் உள்ள அரங்குகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கடந்த அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக மின்வாரியத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து விட்டு மின்மிகை மாநிலம் என கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பேசி வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 9048 கோடி, இந்த ஆண்டு 3500 கோடி என இந்த அரசு 12,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு மானியமாக வழங்கியுள்ளது. மின்கட்டணத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் பா.ஜ.க கர்நாடாவிலும், குஜராத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? 410 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை 1100 ருபாய்க்கு விற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?

மேலும் திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது எதனால் ஆண்டுக்கு ஆண்டு கடன் உயர்ந்தது என்பதை சொல்வார்களா? பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், சிலிண்டர் விலை உயர்வையும் திங்கள் கிழமை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கண்டிப்பார்களா?” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!