Politics
”நான்கே மாதத்தில் வாஷ் அவுட்? அ.தி.மு.கவிற்கு இனி எதிர்காலம் இல்லை” - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோட்டூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே கோட்டூரில் இருந்து பொதுமக்கள் மற்றும் பிரசித்தி பெற்ற குருசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் இன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய புதிய வழித்தடங்களில் பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு இருக்கும் நல்ல பெயர்தான். பொது மக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது கூட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 50 முதல் 60 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இந்த நான்கு மாத காலத்தில் அ.தி.மு.க இருக்கும் இடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
அந்தக் கட்சிக்கு இனிமேல் எதிர்காலம் இல்லை என்று சொல்கிற தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இந்த வெற்றி அதிகாரத்தால் கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளது குறித்து கேள்விக்கு, எந்த இடத்தில் தகறாறு, பிரச்சினை நடந்தது என ஏதாவது ஒரு இடத்தை கூறினால் கூட நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தேர்தல் நேர்மையாக நடந்தது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் முன்னாள் அமைச்சர்கள் தலைமையிடம் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் என பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!