Politics
கொடநாடு: சம்பவத்துக்கு முன்பு வரை ரோந்து பணியில் துப்பாக்கி ஏந்திய போலிஸார்; சர்ச்சையை கிளப்பிய போட்டோஸ்!
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதிக்கு முன்பு 21-04-2017ம் தேதியன்று ஜெயலலிதாவின் பங்களா நுழைவாயிலில் சிசிடிவி கேமிரா செயல்பாட்டில் இருந்திருக்கிறது.
இந்த கேமிரா உள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலை 25ஆம் தேதி பங்களாவுக்கு செல்லும் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமிரா அகற்றப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொடநாடு எஸ்டேட் கணினி பொறியாளர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது மரணம் தற்கொலை அல்ல சந்தேக மரணம் என தனிப்படை போலிஸார் வழக்கை மாற்றி உள்ள நிலையில், சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்பட்டு உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையையும், இவ்வழக்கில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தினேஷ் உடன் பணிபுரிந்த சக ஊழியர்கள், நண்பர்களிடம் போலிஸார் கோவையில் வைத்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!