Politics
ஸ்மார்ட் சிட்டி பேரில் நல்லா இருந்த சாலையை கெடுத்து அதிமுக அமைச்சர்கள் முறைகேடு: துளைத்தெடுத்த PTR!
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் தனசேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்த கட்டுமான பணிகள் மற்றும் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், வணிக வளாக பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை. மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மூன்று அமைச்சர்களின் ஊழலும், வருமானமும் முக்கியமாகப் பார்க்கப்பட்டுள்ளது.
அதற்கு சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருந்த பேவர் பிளாக் சாலை மற்றும் ஆற்று மணல்கள் திருடப்பட்டு கருங்கல் போடுவதாக முறைகேடு செய்துள்ளனர். நன்றாக இருந்த சாலையைக் கெடுத்து தங்கள் வருமானத்திற்காக அமைச்சர்கள் இது போன்ற திட்டங்களை செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் அடிப்படை தவறாக உள்ளது. அந்த அறிவாளிகள் மேற்கொண்ட திட்டம் அவர்ளுக்கே தெரியும். பேவர் பிளாக் சாலையில் அகற்றி அங்கிருந்த ஆற்று மணலை திருடிய பின்னர் கருங்கற்களை பதித்தனர். அதில் அதிக சூடு ஏற்படுவதாகக் கூறி அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களைத்தான் அந்த அறிவாளிகள் செய்து உள்ளார்கள்.
பெரியார் பேருந்து நிலையத்தில் கடைசி நேரத்தில் திட்டத்தில் கூடுதல் நிதியை முறைகேடு செய்வதற்காக தரைதளத்தில் கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு நிதிகள் அதிகம் ஒதுக்கி உள்ளனர். மக்களின் நிதியை முறையாக எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து எங்களுடைய பணிகள் இருக்கும்.
காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனை பாடமாகக் கொள்ளவேண்டும் அப்படி செய்தால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது. இதுபோன்ற நடவடிக்கைகள் தான் முக்கியம் தனி நபர்களை தாக்குதல் செய்வது முக்கியமல்ல என்றும் தெரிவித்தார்.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்