Politics

விநாயகர் சதுர்த்தி : அன்றே சொன்ன தமிழ்நாடு அரசு - கேட்கமாட்டேன் என்பர்களுக்கு அறிவுறுத்திய ஒன்றிய அரசு !

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை நிறுவவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், பா.ஜ.க ஆளும் கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மகாராஷ்டிர, தமிழ்நாடு அரசும் திருவிழாக்கள் நடத்த தடை வித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட கும்பல் இந்த அறிவிப்பை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர்.

குறிப்பாக, கொரோனா காலம் என்றாலும் பரவில்லை; ஊரவலத்திற்கு அனுமதி வழக்கவேண்டும் என தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கூச்சலிட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 4ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், கலை பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

Also Read: “விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிக்கச் சொன்னதே மோடி அரசுதான்” : பா.ஜ.கவினருக்கு தாக்கரே பதிலடி!

இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கொரோனா மூன்றாம் அலை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட திட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை முதல்வர் அறிவித்திருக்கிறார். இருப்பினும் பொதுமக்கள் தனது வீடுகளிலேயே பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் பொதுமக்களின் தனிப்பட்ட பிரார்த்தனைக்கு எந்தவித இடர்பாடும் இருக்காது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அவரவர் வீடுகளில் அவரவர்கள் தனிப்பட்ட முறையில் விநாயகரை வழிபடுவது எந்தவித தடையும் இல்லை. மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தி இருப்பதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் பொது மக்களின் தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் இருக்காது.” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், தமிழ்நாடு அமைச்சரின் பேச்சைக் கேட்காமல், வேண்டுமென்றே இந்துக்களின் திருவிழாக்களை திட்டமிட்டு தடை செய்யும் வகையிலேயே தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Also Read: “தடை விதிக்க சொன்னதே ஒன்றிய அரசு தான்”: பாஜகவின் விநாயகர் சதுர்த்தி அரசியலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

இவர்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிர்வாகியே பதில் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸூக்கு கூட்டம், கொண்டாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அதற்கு நாம் வாய்ப்பு தரக்கூடாது. மேலும் நாட்டில் 35 மாவட்டங்களில் கொரோனா பரவும் விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா பரவல் ஏற்படக் கூடாது என்பதற்காக பண்டிகை காலங்களில் உள்ளூர் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு ஒன்றிய அரசு சொல்லி இருக்கிறது. அவர்களின் அறிக்கையை பா.ஜ.க தயவு செய்து படிக்க வேண்டும் என பலரும் விமர்ச்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “விநாயகர் சதுர்த்தி தடைக்கு பிரதமர் மோடியிடம் போய் கேளுங்கள்”: பா.ஜ.கவினருக்கு ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி!