Politics
அப்ரூவர்கள் ஆகும் சாட்சியால் பதற்றத்தில் EPS.. கொடநாடு வழக்கில் மர்மம் ஆழமாகிறது”: ‘தி வீக்’ ஏடு கட்டுரை!
கொடநாடு வழக்கில் சாட்சிகள் அப்ரூவர் ஆக இருப்பதாலும்; மேலும் 12 ஆவணங்கள் அகப்பட்டு இருப்பதாலும், முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி பதற்றம் அடைந்துள்ளார். அதனால் இந்த வழக்கில் மர்மமமேலும் ஆழமாகியிருக்கிறது என்று“தி வீக்” ஆங்கில வார இதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தி வீக்” ஆங்கில வார இதழின் செப்டம்பர் 5 தேதியிட்ட இதழில் “மர்மம் ஆழமாகிறது” என்ற தலைப்பிலும், “பிரச்சினைக்குரிய கொடநாடு எஸ்டேட் வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியை பதற்றமடையச் செய்துள்ளன” என்ற துணைத் தலைப்பிலும் லட்சுமி சுப்பிரமணியன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடப்பு நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை நடத்துவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தயாராகிக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஒரு பிரச்சினை கிளப்ப முயற்சித்தார். ஆனால், பேரவைத் தலைவர் எம்.அப்பாவு அவரைப் பேசுவதற்கு அனுமதிக்க மறுத்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முழக்கங்களை எழுப்பிவிட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த அரசு தவறான குற்றச்சாட்டுக்களுடன் கொடநாடு கொலை வழக்கில் தன் மீதும், தம் கட்சியினர் மீதும் வீண்பழி சுமத்த முயற்சிக்கிறது. இந்த வழக்கில் புலனாய்வு முடிவடைந்த பிறகும் இத்தகைய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்கள்களிடம் தெரிவித்தார். 800 ஏக்கர் தேயிலைத் தோட்டம்! முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் கொடநாட்டில் உள்ள 800 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில் 2017 ஏப்ரல் மாதம் நடை பெற்ற கொள்ளைச் சம்பவம் பற்றி அவர் குறிப்பிட்டார். அது பாதுகாப்பாளர் (செக்யூரிடி கார்டு) கொலையில் முடிந்துள்ளது. இச்சம்பவம் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது நடைபெற்றது. இந்தச் சம்பவம் நடை பெற்ற நாளுக்கு மறுநாள் இதுபற்றி சட்டப்பேரவையில் தெரிவித்த அவர் இது கொள்ளை தவறாகப் போய்விட்டச் சம்பவம் அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியே செல்ல முயன்றபோது, அவர்கள் பாதுகாவலரால் பிடிக்கப்பட்டனர். அவர்கள்அவரை (பாதுகாவலரைக்) கொலை செய்து விட்டனர் என்று அவர் சொன்னார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேர் மீது 2017 செப்டம்பர் 10ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்போது பழனிச்சாமி, தி.மு.க அரசு தற்போது தன்னையும், தனது உடன் அமைச்சர்களையும், கட்சியினரையும் இந்த வழக்கில் மறைமுகமாக சேர்க்க புலனாய்வு செய்ய முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டி யுள்ளார். தேர்தல் வாக்குறுதி! எனினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வருவது தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்றும், “ இது அரசியல் உள்நோக்கமோ, பகை உணர்வோ, பழி தீர்க்கும் எண்ணமோல்லை” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ இதில் எவரும் இது தொடர்பாக அச்சத்தை வெளிப்படுத்தத் தேவை யில்லை. அரசு கொடநாடு வழக்கில் சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்கு தொடரும் ” என்று தெரிவித் துள்ளார்.
பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசியபோது, பழனிச்சாமி வழக்கத்திற்கு மாறாக பதற்றத்துடன் காணப்பட்டார். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து வந்த நாட்களிலும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர். அத்துடன் அவர்கள் ஆளுநரிடம் மனு ஒன்றும் கொடுத்துள்ளனர். அதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த வழக்கில் தங்கள் கட்சித் தலைவர் களை அந்த வழக்கில் மறைமுகமாகச் சேர்ப்ப தற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகளாகக் கருதுபவை பற்றி தெரிவித்திருந்தனர். 3 நாட்களுக்குப் பிறகு அ.தி.மு.க செய்தித் தொடர் பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப்பற்றி பேரவையில் விவாதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி குற்றம் சாட்டப் பட்டுள்ள 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பழனிச்சாமியையும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உள்பட ஏராளமான சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அந்த வழக்கின் சாட்சிகள் 103 பேரில் 41 பேரிடம் தான் விசாரணையின் போது விசாரிக்கப்பட்டுள்னர். இது விசாரணை நடத்திய வர்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது. அவர்கள் முறையாக விசாரணை நடத்தத் தவறிவிட்டனர்.
குறிப்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரும், முக்கிய குற்றவாளியுமான எஸ்.கனகராஜ் இந்த கொள்ளைக்குப் பிறகு சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டது தொடர்பாக சூழல் கள் பற்றி முறையாக விசாரிக்கத் தவறிவிட்டது. விசாரணை நடத்துவது முற்றிலும் அவசியம்! அதேநாளில் அரசு தரப்பு சாட்சி
ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு கோரிக்கை. யார் விரைவாக வழக்கை நடத்த வேண்டும் என்று விரும்பியது. மேற்கொண்டு விசாரணை நடத்துதவற்கு தடை பெற முயன்றது யார் என்பதாகும். அரசு தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) அந்தக் கோரிக்கையை எதிர்த்தார். “சில ரகசியமான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனால் மேலும் விசாரணை நடத்துவது முற்றிலும் அவசியமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் புலன் விசாரணையும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், நீண்ட காலமாக மர்மத்துடனும், சர்ச்சைகளுடனும் கலந்துள்ளது. கனகராஜ் எடப்பாடியைச் (சேலத்திற்கு அருகில் உள்ள பழனிச்சாமியின் சொந்த ஊர்) சேர்ந்தவர் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டவர் என்று கூறப்படுகிறது. காவல் துறையினரைப் பொறுத்தவரையில் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்த போது, அவருடைய மோட்டார் சைக்கிள் பாதையை விட்டுத் தாவிக்குதித்து சேலம் அருகே கார் ஒன்றின் மீது மோதியது என்று கூறுகின்றனர். எனினும், கனகராஜின் சகோதரர் தனபால் உடனடியாக தன்னுடைய சகோதரர் கொலை செய்யப்பட்ட தாகக் கூறியுள்ளார். “ நான் நான்குமணி நேரத்திற்குள் அந்தச் சம்பவ இடத்தைச் சென்றடைந்து விட்டேன். ஆனால், அங்கு, ரத்தம் சிந்திய அடையாளம் எதுவும் காணப்படவில்லை. டயர் தேய்ந்த அடையாளமும் இல்லை” என்று அவர் சொல் கிறார்.
தனபால் இந்த விபத்து பற்றி விசாரணை நடத்தும்படி தி.மு.க அரசிடம் மனு கொடுத் துள்ளார். என்னுடைய சகோதரரின் மரணத்திற்குப் பின்னால் உள்ள அரசியல்தொடர் புகள் விசாரித்துக் கண்டறியப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது, பழனிச்சாமி பதற்றம் அடைந்தது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார். கனகராஜ் மரணத்திற்கு ஒரு நாள் கழித்து இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான கோயம்புத்தூர் அருகில் உள்ள மதுக்கரையைத் சேர்ந்த சயானும், அவருடைய குடும்ப மும் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே விபத்து ஒன்றைச் சந்தித்தனர். அந்த விபத்தில் சயானின் மனைவியும் 3 வயது மகளும் அதே இடத்தில் இறந்து விட்டனர். அவருக்கும் கடுமையான காயங்கள் ஏற் பட்டன. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழப்பு!
சில வாரங்களுக்குப் பிறகு சுரேஷ்குமார் எனப்படும் கொடநாடு சி.சி.டி.வி.கேமராக்களுக்குப் பொறுப்பாளராக இருந்த கணினி ஆப்பரேட்டர் ஊட்டியில் உள்ள தனது வீட்டில் லுங்கியில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். அவர் தூக்குப் போட்டுக் கொண்ட அந்தலுங்கி அவருக்கு சொந்தமானது அல்ல என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் காவல் துறை அவசரம் அவசரமாக அந்த வழக்கை முடித்து வைத்து விட்டது என்று குற்றம்சாட்டப்படுகிறது. அதற்கு காரணமாக அவருக்கு கண்பார்வை பிரச்சினைகள் இருந்ததாகவும், அது அவரை வேலை செய்ய முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சுவையான செய்தி என்ன வென்றால், கொடநாட்டில் கொள்ளை நடந்த நாளில் அனைத்து சி.சி.டி.வி கேமராக்களும் செயல்படாமல் இருந்தது ஏன்? எனினும் புலனாய்வு அதிகாரிகள் அந்தப் பிரச்சி னையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் சயான் நீலகிரியில் உள்ள நீலகிரி மாவட்டக்காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆசீஸ்ரவாத்தைச் சந்தித் துள்ளார். அப்போது அவர் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவர் நீதிமன்றத்தையும் நாடியுள் ளார். அதில் அவர் இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையிடம் அளிப்பதற்கு தம்மிடம் “ரகசியமான தகவல்” ஒன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜூலை முதல் வாரம் வரை காவலில் இருந்தார். பின்னர் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜான் வழங்கப்பட்டார்.
இந்த முன்னேற்றங்களுக்கு பிறகு தான் காவல்துறை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு செய்தது. சவப்பெட்டியின் கடைசி ஆணி!
தற்போதைய சூழ்நிலைகளின் கீழ், இந்த வழக்கு மீண்டும் புலன் விசாரணை செய்யப்பட முடியாது என்றாலும், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அனுமதி கோர முடியும். மேலும் சட்டம் சயானை அப்ரூவராக மாற அனுமதி அளிக்கலாம். இந்த வழக்கு முன்னேற்றங்கள் பற்றி டுவிட்டரில் செய்தி வெளியிட்டு வரும் அ.தி.மு.க.வின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு முன்னாள் செயலாளர் ஆஸ்பர் சுவாமிநாதனைப் பொறுத்தவரை, பழனிச்சாமையும், அ.தி.மு.க.வும் கவலைப்படு வதற்கு காரணங்கள் உள்ளன. “ மூன்று புதிய சாட்சிகளில் 2 பேர் அப்ரூவராக மாறுவதாக சம்மதித்துள்ளனர். 17 புதிய ஆவணங்கள் தற்போது காணப் படுகின்றது.” என்று அவர் சமீபத்தில் டுவிட்ரில் தெரிவித்து இருந்தார். இது சவப்ட்டியின் கடைசி ஆணியாகஇருக்கக் கூடும்”. இவ்வாறு “தி வீக்” ஆங்கில வார இதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!