Politics

”பேரவையில் கொடநாடு பேச்சை தொடங்கியதே அதிமுகதான்” - அமைச்சர் தங்கம் தென்னரசு தக்க பதிலடி!

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவையின் போது செய்தியாளர்களை சந்தித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அப்போது, தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் பேத்தி வறுமையில் வாடுவதாக சமூக வளைதளத்தில் தகவல் பரவியது. இது முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு வந்தததால் தமிழ் ஆட்சி மொழி மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதற்கும், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழறிஞர்களின் குடும்பம் எந்த காலத்திலும் வறுமைக்கு வரக்கூடாது என்ற நிலையில்  சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களின் குடும்பத்தில் ஏற்படும் இடர்பாடுகளை கலையும் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படும்.

கொடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி உள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக வாதிடக் கூடாது என்று ஜெயக்குமார் தெரிவிக்கிறார். ஆனால் பேரவையில் இது தொடர்பான வாதத்தை முதலில் முன்னெடுத்து அதிமுகதான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் காலத்தில் கொடநாடு பங்களாவில் ஒரு தலைமைச் செயலகமே இயங்கியுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றத்தின் விதியின் படியே விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது.” எனக் கூறியுள்ளார்.

Also Read: கொடநாடு மர்மம்: சயான் வாக்குமூலத்தை வைத்து போலிஸ் கிடுக்குப்பிடி; விசாரணை வளையத்தில் சிக்கிய அதிமுகவினர்!