Politics
”இன்று தரையில் இருக்கும் EPSம், OPSம் நாளை சிறையில் இருப்பார்கள்” - நாஞ்சில் சம்பத் பேச்சு!
சென்னை ராயபுரத்தில் திமுக மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பாண்டி செல்வம் ஏற்பாட்டில் நூறு ஆண்டுகள் போற்றும் 100 நாள் சாதனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் இராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே எபினேசர் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், ரத்தம் சிந்தி சாதிக்க வேண்டிய திட்டங்களை சத்தமில்லாமல் சாதித்துக் காட்டி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளதாக கூறினார்.
கருத்து சுதந்திரத்தை கல்லறைக்கு அனுப்பும் ஆட்சியை அகற்றி ஜனநாயகம் தங்க நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்திருப்பதாகவும், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டத்தின் கீழ் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்து பயன் அடைந்திருப்பதாகவும், தமிழக இளைஞர்கள் ஒரு கோடி பேர் வெகுவிரைவில் வேலைவாய்ப்பைப் பெற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்துவார் என்று கூறினார்.
100 நாட்கள் ஆட்சியில் எதிரிகள் கூட விமர்சனம் செய்ய முடியாத அளவிற்கு ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இது ஆட்சி இல்லை மாட்சியை ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் ,
தமிழ்நாட்டு அரசியலில் ஆட்காட்டி விரலை நீட்டி சுட்டிக்காட்ட முடியாத ஆகாயத்தைப் போன்ற பரிசுத்தமான ஆட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறார். மேலும் வெளிப்படையான எந்த கேள்விக்கும் பதில் தர கூடிய எந்த குறையையும் முதல்வர் நிவர்த்தி செய்து கொண்டிருப்பதாக கூறினார்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது திமுக ஆட்சி, 100 நாளில் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது என்றும் நாளை நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தளிலும் சதமடித்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் நோக்கில் திமுக செயல்படும் என தெரிவித்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதுதான் ஆகமவிதி.
ஆனால் அந்த விதியை இதுவரை செயல்படுத்தாமல் ஒரு நரி கூட்டம் திட்டமிட்டு கொண்டிருந்தது என்றும் நரிகளின் சூழ்ச்சியை முறியடித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தி கலைஞர் வழிநின்று சாதித்து காட்டிய தமிழக முதலமைச்சரை தலை தாழ்ந்து வணங்குவதாக கூறினார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று தரையில் உட்கார்ந்து இருக்கிறார்கள். நாளைக்கு சிறையில் உட்கார்ந்து இருப்பார்கள் என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!