Politics
வெள்ளை அறிக்கை என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!
தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துக்கொண்டிருந்த அதிமுகவால் நிகழ்ந்த நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
முன்னதாக வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் என்னென்ன?
அதன் விவரம் பின்வருமாறு:-
* ஊடகங்கள் அல்லது அமைச்சர்கள் முதலமைச்சர்கள் மூலமாக வரும் தகவல்களை விட அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்படுகின்ற அதிகாரப்பூர்வ அறிக்கைதான் வெள்ளை அறிக்கை.
* இந்த வெள்ளை அறிக்கை என்ற முறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
* வெளிப்படையான புள்ளி விவரங்களோடு உள்ளதை உள்ளபடி உண்மை நிலவரத்தை எடுத்துரைப்பது.
* எளிமையாக சுருக்கமாக தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை இருத்தல் வேண்டும். இதன் மூலம் அரசின் குறிக்கோள்களை மக்களால் தெளிவுற அறிந்துக்கொள்ள முடியும்.
* அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, தொடங்கப்பட்டது முதல் முடியும் வரையிலான அனைத்தும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
* அவ்வாறு வெளியிடப்படும் வெள்ளை அறிக்கை மீது மக்களோ அரசியல் கட்சியினரோ விவாதிக்கவோ அலோசிக்கவோ முடியும். இதன் மூலம் மக்களின் கருத்துகளையும் அரசால் அறிந்துக்கொள்ள முடியும்.
* அரசாங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைப்பதில் இந்த வெள்ளை ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
* அரசின் முக்கிய விவரங்கள் அடங்கிய ஆவணத்தொகுப்பின் முன்பக்கம் வெள்ளை நிறத்தை கொண்டதாக இருப்பதால் அது வெள்ளை அறிக்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
* வெள்ளை அறிக்கை மட்டுமல்லாமல் வேறு சில அறிக்கைகளும் நடைமுறையில் உள்ளன. அதாவது பச்சை அறிக்கை. அது அதிகாரப்பூர்வமான இறுதி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பான ஒரு ஆலோசனைகள் குறித்த ஆவணத் தொகுப்பாகும்.
* அடுத்தபடியாக நீல அறிக்கை, இது தொழில்நுட்பம் அல்லது சாதனங்களின் தொழில்நுட்ப விவரக் குறிப்புகளை தெளிவுபடுத்துவதாகும். அதேபோல மஞ்சள் அறிக்கையானது வெளியிடப்படாத ஆராய்ச்சியை கொண்ட ஆவணமாகும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!