கோப்புப்படம்
Politics

நீட் பற்றி பேரவையில் ஒரு பேச்சு; வெளியே ஒரு பேச்சு: இரட்டை வேடம் போடும் பாஜக - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷயன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் இங்கு உள்ளதால், டெல்டா ப்ளஸ் வைரஸ் தொடர்பான ஆய்வு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மிக விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Also Read: “நீட் தேர்வு ரத்து தீர்மானம் யாராலும் நிராகரிக்கப்படாத வகையில் அமையும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

மேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் என சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்து இருப்பதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பாஜகவின் தோழமைக் கட்சியான அதிமுகவும் நீட் தேர்வு தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஏ.கே. விஜயன் குழுவில் தற்போது வரை 86342 தேர் நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். விரைவில் அதனடிப்படையில் தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Also Read: நீட் தாக்கம்: 86,342 பேர் மனு அளித்துள்ளனர்; அனைவரின் கருத்துகளும் ஆராயப்படும் - ஏ.கே.ராஜன் தகவல்!