Politics
ஒன்றிய மோடி அரசை எதிர்த்து குரல் கொடுப்பதில் முன்னணி தலைவராக விளங்கும் மு.க.ஸ்டாலின் -TOI சிறப்பு கட்டுரை
ஒன்றிய அரசுக்கு சவாலாக விளங்குவதோடு கூட்டாட்சி அமைப்புக்கு வலுச்சேர்க்கிறார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து குரல் கொடுப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னணித் தலைவராக விளங்கு கிறார் என்றும் "தி டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டின் சிறப்புக் கட்டுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ 10.6.2021 அன்று வெளியிட்ட செய்திக் கட்டுரை வருமாறு:-
கடந்த செவ்வாயன்று, பா.ஜ.க. அல்லாத 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கிட, ஒன்றிய அரசை ஒருங்கிணைந்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்துடன், இந்த நெருக்கடியான கால கட்டத்தில், நாம் நம்முடைய ஒருங்கிணைந்த வலிமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
தேசிய அரங்கில் தலைவராகமுன்னணியில் உருவாகி வருகிறார்!
அவரின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, தேசிய அரங்கில் நரேந்திர மோடிக்கு எதிரான தலைவர்களில் முன்னணியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாகி வருகிறார் என்பதைக் காட்டுகிறது. தி.மு.க. அல்லது திராவிடத் தலைவர்கள் யாருமே மேற்கொள்ளாத நிலையாகும் இது. இவ்வாறான செயல்பாடுகளை அவர் மேற்கொள்வதைப் பார்க்கும் போது, ஒன்றிய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு சவாலாக விளங்குவதோடு, கூட்டாட்சி அமைப்புக்கு வலுசேர்ப்பவராகவும் விளங்குகிறார்.
இவ்வாறான செயல்பாடுகளை அவர் மேற்கொள்வதைப் பார்க்கும்போது, ஒன்றிய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு சவாலாக விளங்குவதோடு, கூட்டாட்சி அமைப்புக்கு வலுசேர்ப்பவராகவும் விளங்குகிறார். கடந்த 30 நாட்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மாறாக இதற்கு முந்தைய நான்கு ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளை ஒப்பிடாமல் இருக்க முடியாது. பா.ஜ.க.வுடன் தோழமையுடன் இருந்த கே.பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அரசுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தனர். அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு அடிபணிந்து நடக்கிறது மாநில அரசு என்றெல்லாம் அப்போது கூறப்பட்டது.
தடுப்பூசி விநியோகம் -கடுமையான எதிர்ப்பு!
தி.மு.க. அரசு, தற்போது ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான போக்கைக் கடுமையாக மேற்கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகம் குறைந்து கொண்டே போன நிலையில், ஒன்றிய அரசுக்கு கடுமையான எதிர்ப்பை தி.மு.க. அரசு தெரிவித்தது. விளைவு, உடனடியாக தடுப்பூசிகளை மாநில அரசுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முந்தைய நிதிஅமைச்சரின் மென்மையான போக்கிற்கு முற்றிலும் மாறாக தற்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கடுமையாக நடந்து கொண்டதைப் பார்க்கும்போது, ஒன்றிய அரசுக்கு ஒத்துப்போக முடியாத நிலையை எதிரொலித்தது. தற்போதைய பிரச்சினை என்று பார்க்கும்போது, மாநில அரசு, மத்திய அரசு என்று அழைக்காமல் ஒன்றிய அரசு என்று அழைப்பதுதான்.
இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே, ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஜெ.ஜெயரஞ்சனை மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவில் இரண்டு தி.மு.க.வின் இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது" என்றார். "மாநில அரசுகளின் உரிமைகளை ஒன்றிய அரசு பல வழிகளில் தடுத்து நிறுத்தி, அதிகார மையமாகவும் எதேச்சதிகாரத்தனத்துடனும் நடந்து கொள்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கும் அரசியலமைப்புக்கும் எதிரானதாகும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘தமிழகம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகள், ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முடிவுகளின் எதிரொலியாகத்தான் இருக்கும்’ என்று குறிப்பிடும் அவர், ‘அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளதன் அடிப்படையில் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் குரல் கொடுத்து வருவதைக் காணலாம்’ என்றும் தெரிவித்தார். தி.மு.க.வில் உள்ள பல்வேறு முன்னணித் தலைவர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க.வினரும், மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நடவடிக்கைகளால் அளவிடப்படுகிறார் என்றும், மனக் கிளர்ச்சிகளால் எதையும் எதிர்கொள்வதால் அல்ல என்று குறிப்பிடுகின்றனர்.
ராஜதந்திரத் தகுதிகளைப் பெற்றதலைவராக திகழ்கிறார்!
அதையே திருச்சி சிவாவும் தெரிவிக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சி ஒன்றே முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. ஒன்றிய அரசிடம் எதுவெல்லாம் தேவையோ அவைகளை முறையான வழிகளில் பெற ஒன்றிய அரசை அணுகி, அதைப் பெறுகிறோம் என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார். ஒரு சிலர், மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டபடி யுக்திகளைப் பின்பற்றுகிறார் என்றும்; போர்க்குணம் மிக்கவராக, புகழை விரும்பாதவராக இருக்கிறார் என்றும் குறிப்பிடுகிறார்கள். ராஜதந்திரத் தகுதிகளைப் பெற்ற தலைவராகத் திகழ்வதில் உறுதியாக இருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர். தேவையானவைகளுக்காக ஒன்றிய அரசுடன் வெளிப்படையாகத் தொடர்பு கொள்வது உள்ளிட்டவைகளால் தமக்கேயான பொறுப்புகளால் மு.க.ஸ்டாலின் நிலையை அவர்கள் கணிக்கப்படுவது ஒருபுறம் என்றால்; அவரது அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களது துரித நடவடிக்கைகளால் ஒன்றிய அரசுடன் பொருத்தமாகவே செயல்படுகிறார்கள்.
அண்ணா, கலைஞர் வழியிலேயேமு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்!
திராவிடத் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டவர்கள் ஒன்றிய அரசை தேவைகளுக்காக அணுகும் போது முறையாகவே செயல்பட்டனர் என்றும், அதே வகையில், அவைகளின் விரிவாக்கமாகவே தனது தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்பட்ட வழியிலேயே மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் உள்ளன என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டிட, ஒத்த கருத்துடைய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக வெளிப்படுத்தும் வகையிலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுவது இயற்கையே. ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டில்மாநில அரசுகள் இருக்க வேண்டும்என்பதும், மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ‘இது ஒரு சரித்திரத் தேவை’ என்றும் அரசியல் ஆய்வாளர் ராமு மணிவண்ணன் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, ஒன்றிய அரசு நம்பிக்கைக் குறைபாட்டை உருவாக்கி, மாநில அரசுகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் நிலையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் செய்திக் கட்டுரை வெளியாகி உள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!