Politics
பெரியாரை தொடர்ந்து அண்ணா சாலை, காமராஜர் சாலை பெயர்களையும் மாற்றுவதா? வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை குறித்து வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இது தொடர்பான அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-
”நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு’ என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.
அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமசராசருக்கும் செய்துள்ளனர்!
விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை.
விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு ஏனோ தூண்டுகிறது! வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!
அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா? அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘‘மூலப் புருஷர்கள்’’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன?
தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!