Politics
தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததால் வழக்கு: முன் ஜாமின் கேட்டு கடம்பூர் ராஜூ மனு!
ஊத்துப்பட்டி விலக்கு அருகே கோவில்பட்டி சட்டமன்ற பறக்கும் படையினர் கடந்த மார்ச் 12ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தையும், சோதனைக்காக நிறுத்தியுள்ளார்.
அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு, பறக்கும் படைகுழு தலைவரை மிரட்டியதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடம்பூர் ராஜூ மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், " தவறான தகவலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணக்கு காட்டும் நோக்கிலும், மனுதாரர் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன். ஆகவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!