Politics
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியதில் ₹1 லட்சம் கோடி ஊழல்: கூட்டு கொள்ளையடித்த அதிமுக அமைச்சர்கள் !
சந்தையில் கிடைப்பதை விடகூடுதல் விலைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்று உள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதில் ஏற்கனவே 54 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் இனிவரும் காலங்களில் ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிடில் ரூ. 46 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தற்போதுள்ள அமைச்சர் தங்கமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அந்த இயக்கம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
தனியாரிடம் இருந்து 2013ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு வரை 2,830 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட காலத்துக்கு கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த விரோத ஒப்பந்தங்களால் சந்தையில் கிடைக்கும் விலையை விட 2 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகின்றனர். இதனால், தமிழக அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 15 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்பு மட்டும் ரூ. 1லட்சம் கோடி. இதில் ஏற்கனவே ரூ. 54ஆயிரம் கோடியை இழந்து விட்டோம்.
இனியும் இந்த ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்யாவிடில் மேலும் ரூ. 46ஆயிரம் கோடியை இழக்க உள்ளோம் .2013 - 2014ம் ஆண்டு பல சட்டங்களை மீறி இந்த கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்த விதிகளை மின்சார வாரியம் மாற்றி உள்ளது. வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வரவில்லை என்று தெரிந்தும் 5 மாதத்திற்குள் மின்சாரம் தர 11 தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் 9 முதல் 10 நிறுவனங்களால் கிரிட் இணைப்பு நடக்கும் வரை மின்சாரம் தர இயலாது என்று தெரிந்தும் ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களால் 5 மாதத்திற்குள் மின்சாரம் தர இயலவில்லை. கிட்டத்தட்ட 2 வருடங்கள் அவர்கள் மின்சாரம் தரவில்லை. அப்படி இருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் கொள்முதல் செய்துள்ளார்கள்.
2016 - 2017ம் ஆண்டு முதல் கொள்முதல் செய்ய ஆரம்பித்த மின்சார வாரியம் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு வாங்குவது தற்போது வரை தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 25ஆயிரம் கோடி. இந்த ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பான முன்னாள் மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தற்போது உள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் பற்றிய விரிவான தகவல்களை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று முன்தினம் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நன்றி - தினகரன் நாளேடு
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!