Politics
நக்கலடித்த சுதிஷ்... கழட்டி விடப்பட்டாரா விஜயகாந்த்? - பா.ம.க தேர்தல் அறிக்கையில் சூசக அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் நாளுக்கு நாள் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
உடன்படிக்கைகளின்படி பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
அ.தி.மு.க அமைச்சர்கள் தே.மு.தி.க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே, தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என ஃபேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார்.
மேலும் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய சுதீஷ், “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக அ.தி.மு.கதான் எங்களைக் கெஞ்சுகிறது; நாங்கள் அவர்களைக் கெஞ்சவில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இல்லை என்றால் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது.” என வீம்பாகப் பேசினார்.
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட பா.ம.க தேர்தல் அறிக்கையின் வாயிலாக, கூட்டணியில் தே.மு.தி.க இல்லை என சூசகமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பா.ம.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என பா.ம.க-வின் மாம்பழம், அ.தி.மு.க-வின் இரட்டை இலை, பா.ஜ.க-வின் தாமரை ஆகிய சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்மூலம் கூட்டணியிலிருந்து தே.மு.தி.க கழற்றிவிடப்பட்டதாகத் தெரிகிறது. அ.தி.மு.க, பா.ம.க-வை தொடர்ந்து சீண்டும் வகையில் பேசி வரும் சுதீஷ், பிரேமலதா ஆகியோரால் அதிருப்தியடைந்தே இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க கூட்டணியிலும் இடம் கிடைக்காவிட்டால் தே.மு.தி.க திக்கற்ற நிலைக்குத் தள்ளப்படும் என அக்கட்சித் தொண்டர்கள் கருதும் நிலையில், கட்சியை ஆட்டிப்படைக்கும் பிரேமலதாவும், சுதீஷும் தங்கள் வீம்பு பேச்சுகளை நிறுத்துவதாக இல்லை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!