Politics
ஆட்சி முடியும் நேரத்தில் அவசர அவசரமாக 5-10 லட்சம் பெற்று உள்ளாட்சியில் பணி நியமனம் செய்யும் அடிமை அதிமுக!
அடிமை அதிமுக அரசின் ஆயுள்காலம் முடியும் தருவாயில் உள்ளாட்சித்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறைகளில் அவசர அவசரமாக பணி நியமனங்கள் செய்யப்படுவதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம் எல் ஏ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் அரசு துறையில் பல்வேறு பணிகளுக்கு அவசரகதியில் ஆள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் அலுவலக இளநிலை உதவியாளர்கள் உள்பட பல்வேறு காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் , இந்த பணி நியமனத்திற்கு எந்த ஒரு நாளிதழிலும் விளம்பரம் வந்ததாக தெரியவில்லை .மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், பதிவு மூப்பு அடிப்படையில் யாருக்கும் நேர்முக கடிதம் அளிக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலக நோட்டீஸ் போர்டிலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் , அலுவலக இளநிலை உதவியாளர்கள் பணிக்கு கடந்த 08, 09.02.2021 அன்று வேக வேகமாக , இரவில் பணி நியமனம் நடைபெற்று, மறு நாளே அவர்களுக்கு பணி பதிவேடும் திறக்கப்பட்டுள்ளது. வழக்கமான நிலையில் பணி பதிவேடு திறப்பது என்பது பணி நியமனம் செய்யப்பட நாளில் இருந்து சுமார் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகும். மிகப் பெரிய மோசடி இந்த பணி நியமனத்தில் நடந்து இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இந்த இளநிலை உதவியாளர் பதவிக்கு , மாநகராட்சியிலேயே சீனியாரிட்டி அடிப்படையில் தகுதி வாய்ந்த பலர் இருக்கும் போது அவசர அவசரமாக புதியவர்களை பணி நியமனம் செய்ய காரணம் என்ன ? பல வருடங்களாக பணி புரிந்தும் , அவர்களுக்கு பதவி உயர்வு தராமல் புதியவர்களுக்கு அவசர அவசரமாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் , இதில் மாநகராட்சி நேர்முகத்தேர்வுக்கு அழைத்த 215 பேர் வரவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற துப்புரவு தொழிலாளர்கள் பணி நேர்காணலுக்கு 5000 பட்டதாரிகளுக்கு மேல் விண்ணப்பித்து கலந்து கொண்டார்கள் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது . ஆனால் அலுவலக இளநிலை உதவியாளர்கள் பணிக்கு இவ்வளவு பேர் வராமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது..
மேலும் கடந்த 5 ஆண்டாக அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் பணிக்கு 1,100 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்தப் பணியிடங்களை பூர்த்தி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்ப சொல்லி பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. தற்போது அடிமை அதிமுக அரசின் ஆயுள்காலம் முடியும் தருவாயில், ஆட்களை நியமிக்கும் பணியில் அவசர அவசரமாக ஈடுபட்டு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அரசு வேலை நியமனத்திற்கு கையூட்டு வாங்குவதாக தகவல் வெளியாகிறது.
இதேபோல் கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட வழங்கல் பிரிவில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடை அளவையாளர்கள் பணியிடங்களுக்கும் பல லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 50 க்கும் மேல் காலியாக இருக்கிறது. இந்தப் பணியிடங்களை நிரப்ப தலா 10 லட்ச ரூபாய், விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு 7 லட்ச ரூபாயும், எடை அளவையாளர்களுக்கு 5 லட்ச ரூபாயும் என பேரம் பேசப்பட்டு வருகிறது..
மேலும் , அடிமை அதிமுக அரசின் ஆயுள்காலம் முடியும் தருவாயில் வருவாய் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் என பல்வேறு அரசுத் துறைகளிலும், , ஆட்கள் தேர்வு என்ற பெயரில் பல கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்த தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆட்கள் தேர்வில் பெரும் மோசடி நடப்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தும் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் அமைதி காத்து வருகின்றனர்.
ஏற்கனவே மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ,” திமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து பணிகள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு - அவசர கோலத்தில் - கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று கூறியிருந்தார்
சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்து, குவித்து விட வேண்டும் என்பதற்காக. அகோர லஞ்ச பசியுடன் , ஆட்கள் தேர்வு நடத்தி,பணி நியமனம் செய்து , பல கோடி ரூபாய் சுருட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துணையோடு பெரும் முறைகேடு நடந்து வருகிறது. இதை உடனடியாக நிறுத்தாவிட்டால் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!