Politics

விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிய பா.ஜ.க ஒற்றன் நடிகர் தீப் சித்து கைது!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போலிஸாரின் அடக்குமுறையை மீறி அமைதியான முறையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதுபோல, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்த டிராக்டர் பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட நடிகர் தீப் சித்து, பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுத்த வழியில் செல்லாமல், தடுப்புகளை மீறி சென்றதால் தான் வன்முறை வெடித்தது என விவசாயச் சங்கங்கள் குற்றம்சாட்டின.

மேலும், தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று, சீக்கிய மதக்கொடியை ஏற்றி வைக்கத் தூண்டியதாகவும், போராட்டத்தைத் திசை திருப்பி காலிஸ்தான் இயக்கத்தை ஆதரித்ததாகவும் விவசாயச் சங்கங்கள் குற்றம் சாட்டின.

Also Read: “நீங்கள்தான் குற்றவாளிகள்; அவர்கள் அல்ல” : டெல்லி வன்முறை - ஒரு நேரடி சாட்சியின் குமுறல்!

இதனைத் தொடர்ந்து பேரணியில் வன்முறை ஏற்படுத்தியது தொடர்பாக தீப் சித்து மற்றும் அரவது ஆதரவாளர்கள் மீது டெல்லி காவல்துறை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இதனை அறிந்த தீப் சித்து உடனே தலைமறைவானர். பிறகு காவல்துறை, தீப்சித்து பற்றி தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தது. மேலும் அவரை பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது காவல்துறை. இந்நிலையில், தலைமறைவாக இருந்த தீப் சித்துவை டெல்லி தனிப்படை போலிஸார் இன்று கைது செய்தனர்.

Also Read: "இணைய முடக்கத்தில் உலகிலேயே முதலிடம்: இது தேசிய அவமானம்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பூனாவாலா கடிதம்!