Politics
பாஜகவின் எந்த திட்டமும் எடுபடாது.. திமுகவுக்கு வாக்களிக்க தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் - K.N.நேரு
திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், மக்கள் கிராம சபை கூட்டம் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தென்னூர் வாமடம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும். திமுக ஆட்சியின் போது பஞ்சப்பூர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் திருச்சிக்கான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சித்தோம்.
அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அந்த திட்டத்தை அதிமுக கிடப்பில் போட்டுவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வணிக வளாகத்துடன் , ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம், சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.
இந்த தொகுதியில் (திருச்சி மேற்கு) நான் போட்டியிட வாய்ப்புக்கேட்டு விண்ணப்பிப்பேன். எனக்கு போட்டியிட திமுக தலைமை வாய்ப்புக்கொடுத்தால் போட்டியிடுவேன். திமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் 25 ஆயிரம் கோடி கடன், ஜெயலலிதா ஆட்சியில் 50 ஆயிரம் கோடியாக உயர்ந்தது, தற்போதைய எடப்பாடி ஆட்சியில் 4.5 லட்சம் கோடி கடனாக உயர்ந்துவிட்டது. இதில் தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.
தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரப்பூர்வமாக ஊழல் புகாரை நாங்கள் தெரிவித்தால், அவர்கள் எங்களது தலைவரை தனிநபர் விமர்சனம் செய்கிறார்கள். பொது விநியோக திட்ட அரிசி 5.5 லட்சம் மெட்ரிக் டன் வெளிச்சந்தையில் அமைச்சர் காமராஜ் விற்றுள்ளார் என்று குற்றம்சாட்டினால், குற்றச்சாட்டை மறுக்காமல் அறிக்கை நாயகன் ஸ்டாலின் என்று சொல்கிறார் காமராஜ்.
பொங்கல் பொங்கல் பரிசு தொகுப்பில் 2500 ரூபாய் ரொக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரவில்லை. முதியோர் உதவி தொகை, விதவை உதவித்தொகை பெறக்கூடிய நபர்களுக்கு, அந்த பணம் மறுக்கப்படுகிறது. சிலருக்கு பணம் கொடுத்துவிட்டதாக குறுந்தகவல் மட்டும் வருகிறது. அந்த பணத்தை ஆளும் கட்சியினரே எடுத்துக் கொள்கிறார்கள்.
திமுக ஆட்சி அமைந்து, தளபதி (மு.கஸ்டாலின்) முதலமைச்சராக பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் இந்த பகுதி மக்களுடைய பிரச்சினைகளான சாலை, சாக்கடை, மழைநீர் வடிகால், வீடு இல்லாதவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றை கட்டித்தருவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கூட்டத்தில் பேசினார்.
Also Read: “முன்னேற்றத்தின் சின்னமாக விளங்கிய தமிழகம் 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது” - கே.என்.நேரு குற்றச்சாட்டு!
பின்னர் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு பேசுகையில்,
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்தும் , அவர்கள் எந்ததெந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் திமுக தலைவர் முடிவு செய்து அறிவிப்பார் என பேட்டியளித்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டாஸ்மாக் பேச்சு குறித்த கேள்விக்கு, பாவம், வயசானவர். இப்படித்தான் பேசிட்டு இருக்கார். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்லாமல், எங்களுக்கு பட்டப்பெயர் வைப்பதால் என்ன பயன்? குற்றச்சாட்டை அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தையும் தமிழ்நாட்டையும் பா.ஜ.க குறி வைத்துள்ளது. எப்படி இருந்தாலும் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும். மூன்றாவது அணி அமைந்தாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் எடுபடாது. மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள்.” என கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!