Politics

கேரளாவில் பாஜகவுக்கு உள்ள நிலைதான் இங்கு அதிமுகவுக்கு நிலவும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-

“மார்சிஸ்ட் மாநில குழு கூட்டம் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தற்போத நேரடி கூட்டமானது நடைபெறுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் தேர்தல் பணிகள் தொடர்பான திட்டமிடல்கள் குறித்தும் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணமல் ஒரு மோதலை ஏற்படுத்தி போராட்டத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு வருகிறது. பேச்சுவார்த்தை என இழுத்தடிப்பது நியாயமில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்கு அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சமீபத்தில் வெள்ள சேதம் அதிகமாக உள்ளது ஆளும் அரசு பெயரளவில் பார்வையிட்டுவிட்டு நஷ்ட ஈடுகள் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.

தமிழகத்தின் தேவையை இயற்கை பேரிடர் காலங்களில் மத்திய அரசு ஈடு செய்தாக வராலாறு இல்லை. மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிப்பது செம்மொழி ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிட்டு மைசூர் பல்கலைக்கழக்கத்தோடு இணைப்பது தமிழ் மொழி மீதான காழ்புணர்வை காட்டுகிறது.

Also Read: கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி... படுதோல்வியடைந்த பா.ஜ.க!

140 கோடி மக்கள் உள்ள நாட்டில் 25,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழிக்கு 10க்கும் மேற்பட்ட ஆய்வு நிறுவனங்கள் உள்ளது. மத்திய தொகுப்பில் உள்ள இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். பெண்கள் , குழந்தைகள் , தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாக உள்ளது இவைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் பேச இருக்கிறோம்.

அதிமுகவுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிகள் மீது அபாண்டமான பழிசுமத்த வேண்டும். கேரளாவில் பாஜகவுக்கு இன்று எந்த நிலையோ அதே நிலைதான் இங்கு அதிமுகவுக்கு ஏற்படும். நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மீது பா.ம.கவினர் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது

பாட்டாளி மக்கள் கட்சியின் அராஜகத்துக்கு அளவே இல்லை வன்முறை என்றால் பா.ம.க என்கிற நிலை இருக்கிறது. தேர்தல் ஏப்ரல் மே மாதத்தில் வரும் என்கிற நிலை இருக்கின்ற காரணத்தால் ஓரிரு தினங்களில் பேசி முடிக்க வேண்டிய பிரச்சனை கூட்டணி , இந்த தேர்தலை பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது அதிமுக பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுமே தவிர மூன்றாவது அணிக்கு தமிழகத்தில் வாய்ப்பில்லை” என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் :-

“இந்த மாநில குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தயாரிப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக உடன் தொகுதி உடன்பாடு மேற்கொண்டு போட்டியிட உள்ளது.

டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். எல்லா எதிர் கட்சிகளும் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களுடைய முக்கிய கோரிக்கையான 3 சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே அந்த போராட்டத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

நாளை திமுக கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும். அதிமுக அரசு வேளாண் சட்டத்தை ஆதரிப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் மிக பெரிய துரோகம்.

விழுப்புரம் வளவனூர் கிராமத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது. தமிழகத்தில் கந்து வட்டி தடுப்பு சட்டம் இருக்கின்ற நிலையில் அரசு கந்து வட்டி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கோள்ள வேண்டும். புயல் மற்றும் பெரு மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசிடம் போதிய நிதியை மாநில அரசு பெற வேண்டும்.

கடந்த ஓராண்டு காலமாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை , கேரளாவில் நடைபெற்று வரும் இடதுசாரி ஆட்சியை சீர்குலைக்க எல்லா நடவடிகளையும் மத்திய அரசு மேற்கொண்ட நிலையிலும் இடது முன்னணியை வெற்றி பெற செய்ததற்கு கேரள மக்களுக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த முடிவையே வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் அரசுக்கு அளிப்பார்கள்.” எனக் கூறியுள்ளார்.

Also Read: “RGCB ஆராய்ச்சி மையத்திற்கு கோல்வால்கர் பெயர் வைப்பதா?”: கேரள முதல்வர் - அறிவியல் அமைப்புகள் கண்டனம்!