Politics
“இடைத்தரகர்களின் தூண்டுதலால்தான் டெல்லியில் போராட்டம் நடக்கிறது” - விவசாயிகளை கொச்சைப்படுத்தும் எடப்பாடி!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இடைத்தரகர்களால் தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் போராட்டம் என்று கோடிக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மை குறித்து பா.ஜ.கவினர் எடுத்துரைக்க வேண்டியதை தாம் கூறி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
சேலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு ஆய்வு மாளிகையில், அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பல மணி நேரமாக ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியபோது, புதிய வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் மட்டுமே இதனை பெரிதுபடுத்தி வருவதாகாவும், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே இடைத்தரகர்கள் அதிக அளவில் இருப்பதால், இந்த இடைத்தரகர்களின் தூண்டுதலின் பேரிலேயே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறி, கோடிக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
மேலும், இந்த சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பா.ஜ.கவினர் தான் எடுத்துரைக்க வேண்டும், ஆனால் தாம் தான் எங்கு சென்றாலும் எடுத்துரைத்து வருவதாக கூறி, பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் தான் தான் என்பதை ஒப்புக்கொள்வது போல பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கொரோனா பாதிப்பு ஒரு சில மாவட்டங்களில் குறைந்தாலும், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறையவில்லை என்றும், சேலத்தில் நகரம் மற்றும் மேட்டூர் மட்டுமே கட்டுப்படுத்தபட்ட பகுதியாக உள்ளது என்றும் 11 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால், கொரோனாவை கட்டுப்படுத்திட முடியவில்லை என்றும் கூறி, புதிய விளக்கத்தை அளித்தார். முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே கொரோனா கட்டுப்படுத்தபடவில்லை என்று அவரே ஒப்புகொண்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!