Politics
கரூரில் 1031 பூத்களில் தலா 200 வாக்காளர்களை நீக்க அதிமுக அரசு திட்டம் - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!
கரூரில், திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். அதில், கரூர் மாவட்ட மக்களின் அடிப்படை உரிமையை தில்லு முல்லு செய்து பறிக்க நினைக்கும் அ.தி.மு.கவின் நடவடிக்கைக்கு செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் 1031 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், மாவட்ட ஆட்சியர் துணையோடு, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சுமார் 200 வாக்காளர்களை நீக்க அ.தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் நேரடியாக களத்தில் இறங்கி அ.தி.மு.கவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அ.தி.மு.கவினர் தயார் செய்து கொடுத்துள்ள வாக்காளர் பட்டியலை கொண்டு ஆட்சியர் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கரூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 20 பேர்களை தொழிற்சாலை முகவரியில் வசித்து வருவதாக புதிய வாக்காளர்களாக சேர்த்துள்ளனர்.
நேர்மையாக வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அ.தி.மு.கவினர் குறுக்கு வழியில் இது போன்று யுத்தியை கையாண்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் துணை போவது வேதனையாக உள்ளது என்றார்.
பூத் லெவல் ஏஜெண்டுகளை வைத்துதான் கள ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டும் அதை பின்பற்றாமல் அதிகாரிகளை தன்னிச்சையாக அனுப்பி இது போன்ற குளறுபடிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருவது ஏற்கத்தக்கதல்ல.
இது போன்ற தவறுகள் செய்வதை மாவட்ட ஆட்சியர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தில் திமுக வழக்கு பதிவு செய்யும் எச்சரித்ததோடு, கரூர் மாவட்டத்தில் புதிதாக கள்ள ஓட்டுகளை சேர்த்து வெற்றி பெற அ.தி.மு.க புதிய திட்டம் தீட்டியுள்ளது. ஆனால், வருகின்ற சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு இறுதி தேர்தலாகும் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!