Politics

திமுக கூட்டணி உடையும் என்ற கடம்பூர் ராஜூவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது - முத்தரசன் பதிலடி

விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை கிண்டி தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் பேட்டியளித்ததன் விவரம்:

தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற வகையில் மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றி சட்டத்தை நியாயப்படுத்துகிறது.

விவசாயிகள் தொடர்ச்சியாக தன்னிச்சையாக போராடுகின்றனர், அவர்களுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்; பெரு நிறுவனங்கள் மட்டுமே இது பலனளிக்கும்.

திமுக கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, வி.சி.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தனி சின்னத்தில் நிற்பது ஒன்றும் தவறில்லை; தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.

இதனையடுத்து, எந்த கழுதையில் யார் சவாரி செய்வது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு முத்தரசன் இவ்வாறு பதிலளித்தார்.

திமுக கூட்டணி உடைவது மட்டுமல்ல; சிதறிவிடும் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளது அவரது கனவு. அது நிறைவேறாது என்றுக் கூறிய முத்தரசன், திமுக கூட்டணி பலவீனப்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லாப்பாவின் எண்ணம். சர்க்கரை என பேப்பரில் எழுதி நாக்கால் நக்குவது போல இருக்கிறது அவரின் விமர்சனம் என பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read: Farm Bills: “விவசாயி மகனே ஆதரித்தது வெட்கக்கேடு.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க” - முத்தரசன்