Politics
“அ.தி.மு.க அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய துரோகம்” - கனிமொழி எம்.பி சாடல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தைக்கொண்டான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் பாராளுமன்ற குழு தி.மு.க துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து. தமிழக மாணவர்களை பாதிக்கக்கூடிய ஒன்றாக இன்றைக்கு நீட் உள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து இந்தாண்டு கூட ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எத்தனையோ உயிர்களை நீட் தேர்வுக்காக இழந்திருக்கிறோம்.
நீட் தேர்வு வேண்டாம் என்று தி.மு.கவும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி வருகிறோம். எக்காரணம் கொண்டும் தமிழக அரசு நீட் தேர்வினை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தொடர்ந்து எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசு மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய தூரோகமாக அமையும்.
கொரோனா பிரச்சினையில் தமிழக அரசு எடுத்திருக்கும் முன்னெடுப்புகளும் மிகத் தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகத்திற்கு மிக மோசமான சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
பல குளறுபடிகள், பல்வேறு குழப்பங்கள், இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைக்கக்கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். எந்தத் தெளிவும் இல்லாமல் மத்திய அரசு ஒரு முடிவு சொல்கிறது. மாநில அரசு ஒரு முடிவு எடுக்கிறது.
ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலம் செல்லலாம். இ-பாஸ் எளிதாக எடுக்கலாம் என்று கூறிய பின்னரும் ஊரடங்கு கொண்டுவருவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? இது இன்னும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். லஞ்சம் வாங்க வழிவகுக்குமே தவிர கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?