Politics

“கந்த சஷ்டிய பெருசாக்கி OBC-ஐ மறைச்சேன் பாத்தியா; அதான்டா பா.ஜ.க” - ட்விட்டரில் அனல் பறக்கும் மீம்கள்!

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தி.மு.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

வழக்கு விசாரணையின் போது, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது என வாதிட்டது. மேலும் மெரிட் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்றும், அதேநேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுறது. மேலும், மருத்துவ மேற்படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான பல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியது மத்திய அரசு தரப்பு.

Also Read: “மருத்துவப் படிப்பில் OBC இட ஒதுக்கீடு” - தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 27ல் தீர்ப்பு!

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் இருந்தால், தமிழக அரசுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான தீர்ப்பு வருகிற 27ம் தேதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓபிசி இடஒதுக்கீடு இல்லையென மத்திய அரசு கூறியிருப்பது தமிழக மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் சதி என அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் முருகன் மற்றும் கந்த சஷ்டி பாடல் தொடர்பாக தவறாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை முன்னிலைப்படுத்தி பாஜக மற்றும் பல இந்துத்வ அமைப்புகள் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு விவகாரத்தை மழுங்கடிக்க முயற்சித்து வருகிறது.

மக்கள் மத்தியில் மத ரீதியிலான பிரச்னையை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் மக்கள் கொந்தளித்து மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் மூலம் தங்களது கடுமையான கண்டனங்களையும், பாஜக அரசின் சூழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

OBC இடஒதுக்கீடு தொடர்பாக சிந்திக்க வைக்கும் மீம்ஸ்கள் இங்கே:-