Politics
“மார்க்சிய தத்துவத்தின் மனித உருவம் தோழர் நல்லகண்ணு” - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 94 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 95-ம் ஆண்டு அமைப்பு தின விழா காண்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணுவின் 96வது பிறந்தநாளும் இன்றே.
இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் விழா நடைபெற்றது. தோழர் நல்லகண்ணுவைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
பின்னர், வாழ்த்திப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்று 95வது பிறந்தநாள் காணும் அய்யா நல்லகண்ணு அவர்களை வாழ்த்துவதற்காகவும், வணங்குவதற்காகவும் தி.மு.க சார்பில் நான் இங்கு வந்திருக்கிறேன். மார்க்சிய தத்துவத்தின் மனித உருவமாக நம் கண்முன்னே இருக்கக்கூடியவர் அய்யா நல்லகண்ணு அவர்கள்; அடித்தட்டு மக்களுக்காக போராடக்கூடியவர். எளிமையாக, இனிமையாக, அதேநேரம், கம்பீரமாக துணிவாக போராளியாக உழைத்துக் கொண்டிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள் நூறாண்டு காலம் தாண்டி வாழ்ந்து நமக்கு வழிகாட்டவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக.. இதோ நம்முன் வாழ்கிறாரே அய்யா நல்லகண்ணு அவர்களைப் போல இருக்கும்!
மார்க்சியத் தத்துவத்தின் மனித உருவம் அவர். 95 வயதிலும் தொய்வில்லாப் போராளி; இடைவிடாத உழைப்பாளி; தூய்மையான சிந்தனையாளர். அய்யா நல்லகண்ணு அவர்களை வணங்குகிறேன்.
இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து மக்களுக்கு உணர்ச்சியூட்டுங்கள்! உற்சாகமும் ஊக்கமும் தாருங்கள்!என்று அவரைப் பணிவன்புடன் வேண்டுகிறேன். தி.மு.கழகத்தின் சார்பில், நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!