Politics
''இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது'' - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில்:
“இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை (naturalisation) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும்.
சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள்ளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுதிப் பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!