Politics
''தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்''- வைகோ பேட்டி
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நீர்மேலான்மை விஷயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. எடப்பாடி அரசின் மெத்தன போக்கால் கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது.
இது குறித்து தமிழக அரசு தீர்ப்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. அதற்கு தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. இத்திட்டத்தினால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.
அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அ.தி.மு.க முயற்சி செய்யும், ஆனால் தி.மு.க அந்த முயற்சி ஈடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க உடன் ம.தி.மு.க கூட்டணி தொடரும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை என்ற வைகோ, கலைஞர் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்.
வலுவான கூட்டணி அமைத்து 39 தொகுதிகளை வென்று தனது ஆளுமையை, தலைமை பண்பை நிரூபித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!