Politics
“ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளிக்காத எஸ்.பியை இடமாற்றம் செய்க” - சர்வாதிகாரத்தின் உச்சத்தில் பா.ஜ.க!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியதற்கு மாவட்ட எஸ்.பி செல்வராஜ் மறுத்துள்ளார். இதனையடுத்து அவரை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ராமநாதபுரம் மண்டல பா.ஜ.க இளைஞரணி பா.ஜ.க தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது.
ராமநாதபுரம் மண்டல பா.ஜ.க இளைஞரணி பொறுப்பாளர் டி.எஸ். பாண்டியராஜ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜிடம் அனுமதி கோரியிருந்தோம்.
ஆனால் கடைசி நேரம் வரை பேரணி நடத்த மாவட்ட எஸ்.பி அனுமதியளிக்க மறுத்துள்ளார். அரசியல் நோக்கத்துடன் பேரணி நடத்த செல்வராஜ் அனுமதி அளிக்கவில்லை. ஆகவே செல்வராஜை வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யவேண்டும்” என பாண்டியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேரணிக்கு அனுமதி தராததற்காக ஒரு காவல்துறை உயரதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என தன் தலைமையிடம் பா.ஜ.க இளைஞரணி பொறுப்பாளர் கோரியிருப்பது சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.
தங்களுக்கு ஏதுவாகச் செல்லவில்லை என்றால் அதிகார துஷ்பிரயோகம் செய்வோம் என் சொல்லாமல் சொல்லும் வகையிலேயே இந்த கடிதத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூர் எவ்வித மத பாகுபாடுகளும் இல்லாமல் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி. இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தவேண்டும் என பா.ஜ.கவினர் துடிப்பது மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்து விடுமோ என்ற எண்ணத்தில் மாவட்ட எஸ்.பி அனுமதி மறுத்திருப்பார் என கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!