Politics
“மோடியும் ட்ரம்பும் காதலர்களா?” ; ட்ரம்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதா? அசாதுதீன் ஒவைசி கண்டனம்!
ஐ.நா. சபையில் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி அரங்கில் இந்தியர்கள் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்துக்கொண்ட அந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துக்கொண்டனர். மேலும் அந்த கூட்டத்தில் சிறப்புறையாற்றிய மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்தியாவின் பிரதமராக இருப்பவர்கள் அயல்நாட்டு தேர்தல்களில் குறித்து பேசவே, பங்குபெற்று வாக்கு சேகரிக்கவே கூடாது என்ற நிலை பின்பற்றப்படு இருக்கும் வேலையில் மோடி அந்த கூட்டத்தில், இந்தியில் "ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்" என்று,“அதாவது ட்ரம்ப் அரசுதான் இந்த முறையும்” என்று ஆதரவாக பேசி வாக்கு சேகரித்தார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் கடும் கண்டங்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்புடன் கைக்கோர்த்து காதர்கள் போல சென்றுள்ளனர்.
இதனைப்பார்த்ததும் மோடியிடம் நான் கூறவிரும்புவது என்னவென்றால், அமெரிக்க அதிபர்களுடன் ஆன நட்பினை சமநிலையில் தான் பின்பற்றவேண்டும். ஒருவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்விவியடைந்துவிட்டால் என்ன நடக்கும் என உணரவேண்டும்.
ட்ரம்ப் ஏமாற்ற தெரிந்தவர், தந்திரக்காரர். அவருடன் நட்புக்கொள்ளும் அளவிற்கு தகுதியான நபர் அவர் கிடையாது. இதேவேலையில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்திருந்தால் அவரை பாராட்டுவார், துதிபாடுவார். அதனால்தான் சமநிலையுடன் நட்பு கொள்ள பிரதமர் மோடியை வழியுறுத்துகிறேன்.
அதுமட்டுமல்லாது, பிரதமர் மோடி 2024-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று விடுவார் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அவர் சந்திரனுக்கு மட்டும்தான் செல்ல வேண்டும் என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?