Politics

சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்து சிக்கியவருக்குத் துணை முதல்வர் பதவி : சர்ச்சையில் சிக்கிய எடியூரப்பா!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 3 துணை முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கோவிந்த் மக்தப்பா கராஜோல், டாக்டர். சி.என்.அஸ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்ப சவாடி ஆகிய 3 பேர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மன் சங்கப்ப சவாடி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-வோ எம்.எல்.சி-யோ அல்ல. இவர் முதலமைச்சர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் இவருக்கு பதவி வழங்கப்பட்டதாகக் கூறி சர்ச்சை வெடித்துள்ளது. மேலும், இவரது இலாகாவாக போக்குவரத்துத் துறை அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று துணை முதல்வர்களில் ஒருவரான கோவிந்த் மக்தப்பா கராஜோலுக்கு சமூக நலத்துறை மற்றும் பொதுப்பணித் துறையும், டாக்டர் அஸ்வத் நாராயணுக்கு உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த அமைச்சரையில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ. எச்.நாகேஷ் அமைச்சராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.