Politics
சோவியத் ரஷ்யா போல் இந்தியாவும் துண்டு துண்டாக உடைந்து போய்விடும் - வைகோ
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''நாடாளுமன்றத்தை நீட்டித்து முக்கியமான மசோதாக்களை நீண்ட விவாதம் இல்லாமல் நிறைவேற்ற மத்திய அரசு துடிக்கிறது. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் இந்தியாவிலேயே தமிழகம் தான் பாதிக்க போகிறது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வர முயற்சி செய்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை வாசித்து காட்டினேன். இதில் உள்ள பிரிவுகள் தமிழகத்திற்கு ஆபத்து என்று கூறினேன்.
கேரளா, கர்நாடக, ஆந்திராவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தந்த மாநில அரசுகளுக்கு அணைகள் முழு கட்டுபாட்டில் வந்துவிடும். இதனால் சோவியத் ரஷ்யா போல் இந்தியாவும் துண்டு துண்டாக உடைந்து போய்விடும்.
அந்தந்த மாநிலத்தில் உள்ள அணைகள் அந்தந்த மாநிலத்திற்கு தான் முழு கட்டுபாட்டு என்றால் நெய்வேலி, திருச்சி, ஆவடி துப்பாக்கி தொழிற்சாலை கடற்படை தளம் எங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்ல கூடிய நிலை ஏற்படும் என்று சொன்னேன். அதை தொடர்ந்து மசோதா நிறைவேற்றப் படவில்லை. அந்த மசோதாவில் சில பிரிவுகளை சேர்த்து மிக மோசமான முறையில் மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களின் வாழ்வும் பாழாகிவிடும். வருங்கால சங்கதிகளை பற்றியும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் நிலை என்ன ஆகபோகிறது என்று கவலைப்படுகிறேன்.
அ.தி.மு.க கருத்துக்களை சிறப்பாக பேசுகிறது. ஆனால், ஓட்டெடுப்பு வரும்போது தந்திரமாக வெளிநடப்பு செய்து விடுகின்றனர். எல்லாரும் எதிர்த்து ஒட்டு போட்டு இருந்தால் முத்தலாக் மசோதா தோல்வியடைந்து இருக்கும். சட்டவிரோத தடுப்பு மசோதா தான் என்னுடைய கன்னி பேச்சு. அப்போது திருத்தம் கேட்டு வாக்கெடுப்புக்கு விட கோரினேன். 16 ஒட்டு வித்தியாசத்தில் அரசுக்கு ஆதரவாக இருந்தது. மத்திய அரசுடன் சில கட்சிகள் ரக்சியமாக உறவு வைத்துக் கொண்டு எதிர்க்கிற மாதிரி பேசிவிட்டு ஓட்டெடுப்பு என்றதும் வெளிநடப்பு செய்துவிட்டு ஆதரித்துவிட்டு செல்கின்றனர்.
பெரியார், அண்ணா வழியில் கருணாநிதியின் மாநில சுயாட்சியை நிலை நாட்டும் வகையில் கட்சி எல்லைகளை கடந்து தமிழகத்தின் உரிமைக்காக குரல் ஒலிக்கும். தேசவிரோத வழக்கில் சுதந்திரத்துக்கு பின் தண்டிக்கப்பட்ட ஒரே நபர் நான் தான். சுதந்திரத்துக்கு முன் பெரிய தலைவர்களாண காந்தி உள்பட பல தலைவர்கள் தண்டனை பெற்று உள்ளனர். நான் சாதாரண தூசு. தேச துரோக வழக்கில் என் மீதான வழக்கில் ஒராண்டு தண்டனையை 2 ஆண்டாக மாறினால் என் பதவி பறிபோய்விடும். அதை பற்றி கவலைப்படவில்லை. மனித வாழ்க்கை 10 அல்லது 20 ஆண்டுகளாக என்று தெரியாது.
நான் பேசும்போது எந்தவொரு எம்.பி குறுக்கிடவில்லை. இந்தியா துண்டாகும் என்றபோது ஒருவரும் கொந்தளிக்கவில்லை. தலைவர்களை பாராட்டியும் விமர்சனம் செய்தும் பேசியதால் எந்தவித முனுமுனுப்பும் கிடையாது'' இவ்வாறு கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!