Politics
கோடிக்கணக்கில் பணம் மோசடி - சிக்கலில் தோனி : அரசியல் விளையாட்டில் தோனியை பகடை காய் ஆக்கிய பா.ஜ.க ?
‘அம்ராபாலி’ குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம், வீடு கட்டித் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக பொதுமக்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரண்டு பேர் கொண்ட ஆடிட்டர்கள் குழுவை நியமித்தது. இதனையடுத்து, நிதி மோசடி நடைபெற்றிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என ஆடிட்டர் குழு அறிக்கை அளித்துள்ளது.
அதில், அம்ராபாலி நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற பணத்தினை தனது மற்ற குழும நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2010 முதல் 16ம் ஆண்டு வரை செயல்பட்டுள்ளார் என்றும், அவரது மனைவி சாக்ஷி ‘அம்ராபாலி மகி’ என்ற நிறுவனத்த்தின் இயக்குநராக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்ராபாலி மகி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 25% பங்குகளை சாக்ஷியிம், மீதமுள்ள 75% பங்குகளை அம்ராபாலி நிறுவனமும் வைத்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டுவரை அம்ராபாலி மகி நிறுவனத்தில் சாக்ஷி தோனி இயக்குநராக இருந்துள்ளார்.
வீடு கட்டித்தருவதாக பொதுமக்களிடம் இருந்து பெற்ற ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேலான தொகையை அம்ராபாலி மகி உட்பட தனது மற்ற நிறுவனத்துக்கு கணிசமான தொகையை கைமாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமில்லாமல் தோனியின் ‘ரிதி ஸ்போர்ஸ்ட்’ நிறுவனத்திற்கு அம்ராபாலி ஷேப்பயர் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக பொதுமக்கள் அளித்த சுமார் 6 கோடி ரொக்கம் கைமாற்றப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், 2015ம் ஆண்டுக்கு பிறகு தோனியின் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அம்ராபாலி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டபோது 40 கோடிக்கும் மிகாமல் முதலீடு செய்துள்ளார். அதனை திரும்ப பெற்றுத்தரும்படி 2016ல் தோனி வழக்குப்பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடிட்டர்கள் அளித்த அறிக்கையை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த மோசடி விவகாரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நடப்பு ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என பரவலாக பேசப்பட்ட நிலையில் ஒரு மாதம் ராணுவத்தில் பணியாற்ற அவர் சென்றுள்ளார்.
இதற்கு மத்தியில், மூன்று மாதங்களில் வரவுள்ள ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது பா.ஜ.க சார்பில் தோனியை களமிறக்க திட்டமிட்டிருப்பதால் இது போன்ற மோசடி புகார்களில் தோனியையும் அவரது மனைவியையும் சிக்கவைத்து பின்னர் வழக்கம்போல் தனது வேலையை காட்ட பா.ஜ.க தலைமை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடும் நோக்கில் செயல்பட்டு வரும் பா.ஜ.க, கர்நாடகா, கோவா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்கிற பெயரில் அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதில் தோனியையும் பா.ஜ.க வசம் இழுக்கும் திட்டம் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!