Politics
கம்யூனிஸ்ட் கட்சி இனி இல்லை.. பா.ஜ.க.,வில் சேருங்கள் எனக்கேட்ட அமித்ஷாவுக்கு பெண் எம்.பி கொடுத்த பதிலடி
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை சம்பவங்களை பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டது. இதுகுறித்து புகார் அளிக்க திரிபுரா எம்.பி ஜார்னா தாஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சந்திப்பின் போது திரிபுரா வன்முறைகள் குறித்த ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் ஜார்னா தாஸ் கொடுத்துள்ளார்.
அப்போது ஜார்னா தாஸை பா.ஜ.க.,வில் சேருமாறு அமித்ஷா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜார்னா தாஸ் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது, இன்னும் ஏன் அந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்? என்று தன்னிடம் அமித்ஷா கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“ நான் திரிபுரா பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களை பா.ஜ.க தலைவராக இங்கே சந்திக்க வரவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற அடிப்படையில்தான் உங்களை சந்தித்தேன். உங்கள் யோசனைக்கு நான் உடன்படவில்லை.
நாங்கள் உங்களை மிகக் கடுமையாகத் தொடர்ந்து எதிர்ப்போம். உங்க சித்தாந்தம் வேறானது. உங்களை எதிர்க்கிற வரிசையில் ஒற்றை ஆளாக தனியாக நான் மட்டுமே இருக்கின்ற நிலைவந்தாலும் எதிர்த்துக் கொண்டேதானே இருப்பேனே தவிர கட்சி தாவ மாட்டேன்” என்று கூறியதாக ஜார்னா தாஸ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த மூன்று வாரங்களில் ஆறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர், மேலும் இரண்டு எம்.பி.,க்கள் விரைவில் சேருவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க.,வில் சேர்ந்த ஆறு பேரில், நான்கு பேர் தெலுங்கு தேசம் கட்சியும், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாடியிலிருந்து தலா ஒருவரும் இணைந்துள்ளனர். பா.ஜ.க.,வின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்