Politics
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நிச்சயம் கவிழும் - காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் : மூத்த வழக்கறிஞர் ஆருடம்
கர்நாடகாவில் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி அரசை கவிழ்த்து பா.ஜ.க ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களிடையே குதிரை பேரம் பேசி ராஜினாமா செய்ய வைத்து உள்ளே வெளியே ஆட்டத்தை ஆடி வருகிறது.
இதனையடுத்து காங்கிரஸில் 13 பேரும், ம.ஜ.த-வில் மூவரும் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் 10 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட மறுத்துள்ளது.
இதற்கிடையே, நாளை (ஜூலை 18) கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நிச்சயம் கர்நாடகாவில் கூட்டணி அரசு கவிழும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொறடா உத்தரவு மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!