Politics

சபாநாயகருக்கு உத்தரவிட மறுப்பு... கர்நாடக அதிருப்தி MLAக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!

கர்நாடகாவில் கூட்டணி அரசில் அதிருப்தி ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேரும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 பேரும் ராஜினாமா செய்தனர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகரின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 10 எம்.எல்.ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருகிற செவ்வாய்க்கிழமை வரை (இன்று வரை) கர்நாடகாவில் தற்போதையே நிலையே நீடிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், சபாநாயகர் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாளை மறுநாள் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கர்நாடக அரசுக்கு எதிராக வாக்களிப்பதை தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.