Politics
பா.ஜ.க ஸ்டைலை கையில் எடுத்த குமாரசாமி: உயிரே போனாலும் கர்நாடகாவில் ஆட்சியை விட்டுத் தரமாட்டேன் என சபதம் !
கர்நாடகாவில் மொத்தமுள்ள 225 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மும்முனை போட்டி நிலவிய களத்தில் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 79 இடங்களே வென்றிருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த எடியூரப்பாவின் பா.ஜ.க 105 இடங்களை வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களை வென்றது.
ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலையில், கர்நாடகாவில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறாத்தால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், ஆளுங்கட்சியான காங்கிரஸ் குமாரசாமியின் ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்தது. இறுதியில், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும், 1 பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் காங்கிரஸ், ம.ஜ.த.,வுடன் இணைந்தனர்.
பின்னர் முதலமைச்சராக ம.ஜ.த.,வின் குமாரசாமியும், துணைமுதலமைச்சராக காங்கிரஸின் பரமேஸ்வராவும் பதவியேற்றனர். இந்நிலையில் அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். கடந்த 6ம் தேதி காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆனால் சபாநாயகர் அவர்களின் கடிதத்தை ஏற்க மறுத்தார். ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏக்களும் நேரில் வந்து விளக்கமளித்தால் அவர்களின் ராஜினாமா கடிதத்தை பரீசீலனை செய்வதாக கூறியிருந்தார். அவ்வாறு அந்த பரிசலைனையை சபாநாயகர் ஏற்றால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பா.ஜ.கவிற்கு பெரும்பான்மை பலம் அதிகரிக்கும்.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குமாரசாமி தனது பதிவியை ராஜினாமா செய்வார் என்று கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி பேசியதாவது, "எடியூரப்பா தலைமையில் 2008-09ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் யாருக்கும் ஞபாகம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். இந்த கூட்டணி அரசு நீடிக்கும் என நம்பிக்கை உள்ளது. நான் பதவி விலக மாட்டேன், அனைத்து வகையிலும் போராடுவேன் என்று தெரிவித்தார்.
இதன்மூலம் தனது முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்யப்போவதில்லை என்று தெளிவாக தெரிந்துவிட்டது. 2008ம் ஆண்டுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் எடியூரப்பா தலையில் அமைந்த ஆட்சிக்கு தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த அப்போதிருந்த ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார்.
மறுநாள் வாங்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தன்று வாபஸ் பெறப்போவதாக அறிவித்திருந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை மீது தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பின்பு எடியூரப்பா ஆட்சி தப்பித்தது. அதனைக் குறிப்பிட்டு, தற்போது குமாரசாமி கூறியுள்ளதால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எல்லோரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
இப்போது குமாரசாமி இதே உதாரணத்தைக் கூறியுள்ளதைப் பார்த்தால், அதிருப்தியாளர்களைத் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகர் முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்னை நடந்து வரும் நிலையில், முதல்வர் குமாரசாமி இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி தொண்டர்கள் உச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக கர்நாடகா மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு பா.ஜ.க.,வே காரணம் எனக்கூறி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!