Politics
ராகுல் காந்தி ராஜினாமாவை அடுத்து அடுத்த வாரம் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி?
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. மேலும், காங்கிரஸ் தலைவராக தான் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!