Politics

இந்தியாவை அதிபர் ஆட்சி நாடாக மாற்ற முயற்சிக்கிறார் மோடி: நாடாளுமன்றத்தில் வெடித்த திருமா !

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் மக்களவையில் உரையாற்றினர். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ''குடியரசு தலைவர் உரையில் தெரிவித்த திட்டங்களை மத்திய அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அதே நேரம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஏற்க முடியாது. இந்தியாவை அதிபர் ஆட்சி நிலைக்கு கொண்டு வரக்கூடிய மறைமுக திட்டம் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை.

நாட்டு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் எதிரான திட்டம் தான் இந்த தேர்தல் முறை. குடியரசுத் தலைவர் உரையில் தாழ்த்தப்பட்டோருக்கு என்று எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நாட்டில், பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது'' என்று குறிப்பிட்டார்.