Politics
சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்வர் : பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் புகைச்சல் !
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்வராக பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் பாஜக கட்சி 23 இடங்களையும், சிவசேனா கட்சி 18 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க கட்சி மீண்டும் மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்கியது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாமனாவில் அக்கட்சியின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட தலையங்கத்தில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிவசேனா ஆண்டு விழாவை முன்னிட்டு மராட்டிய மாநில சட்டமன்ற கட்டிடத்திற்கு காவி வண்ண சாயம் பூசுமாறு அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கட்சியின் 54வது ஆண்டு விழாவின் போது, சிவசேனாவின் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் தான் மராட்டியத்தின் முதல்வராக இருப்பார் என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே,தமது மகன் ஆதித்யா தாக்ரேவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த தலையங்கம் அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் பதவி சிவசேனாவுக்கு தான் என்ற சாமானாவின் தலையங்கம் பாஜக - சிவசேனா கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!