Politics
அடிமை சாசனம் எழுதி தந்த கட்டப்பாவை போல் உள்ளது அ.தி.மு.க - கே.எஸ்.அழகிரி விமர்சனம் !
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
" பா.ஜ.க தனது கோர முகத்தை கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன் வைத்து இருக்கிறார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் தேசத்தை ஒற்றுமைபடுத்தும் விதமாக இருக்கும் என்று கூறுவார்களே தவிர உண்மையில் அதனால் எழும் பிரச்சனையை பா.ஜ.க.வால் கூட தீர்க்க முடியாது.
பா.ஜ.க உருவாக்கி வரும் பூதம் அவர்களையே விழுங்கிவிடும். இந்தியாவில் கூட்டாச்சி தத்துவ முறை தான் உள்ளது. பல்வேறு மதம், பல மொழி என்ற கூட்டு அமைப்பு. இந்தியா ஒரே நாடு என்று இவர்கள் கற்பனை செய்வது முற்றிலும் தவறானது. முன்னாள் அறிஞர்களால் இந்திய யூனியன் என்று நாட்டை பலப்படுத்தினார்கள். ஆனால் இன்று பா.ஜ.க ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் மூலம் பலவீனப்படுத்துகிறது. நாட்டை பலப்படுத்த வேண்டும் என்றால் அந்த பிரச்சனையை தொடாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறி பா.ஜ.க. செயல்பட்டால் தேன் கூட்டில் கை வைத்தால் ஒரு நாள் பா.ஜ.கவையே கொட்டும். அதுமட்டுமின்றி இது போன்ற கொள்கையின் மூலம் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நடைமுறைப்படுத்த பார்க்கிறது.
அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதிக்கப்படாததை பற்றி கவலை பட மாட்டார்கள். ஏற்கனவே அடிமை சாசனத்தை எழுதி கொடுத்து விட்டார்கள். அடிமை சாதனைத்தில் இருந்து மீற முடியாது. பாகுபலி படத்தில் அடிமை சாசனம் எழுதி தந்த கட்டப்பாவை போல் அ.தி.மு.க உள்ளது.
7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தி மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழி என்று இருப்பது தவறு. அதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்திய ரெயில்வே உலகத்தின் இரண்டாவது மிக பொது சேவை நிறுவனம் ஆகும். அதை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆளும் பா.ஜ.க அரசினால் புதிய பொதுதுறையை உருவாக்க முடியவில்லை என்றாலும் இருப்பதை அழிக்க நினைக்க கூடாது.
தமிழிசைக்கு எது முரண் ? எது முரண் இல்லை ? என்பதே தெரியாது. ஒரே கையெழுத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக தான் பதவி ஏற்பின் போது ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு இருப்பார்கள். கையெழுத்திற்கு எழுத்து மொழி இல்லை என்பதை தமிழிசை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ராகுல்காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருகிறார். எல்லா மாநிலத்திலும் மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது அதன் ஒரு அங்கம் தான் கர்நாடகாவில் மறுசீரமைப்பு நடைபெற்றது. இதன் தாக்கம் நாடு முழுவதும் இருக்கும். தமிழகத்திலும் நிச்சயமாக மறு சீரமைப்பு இருக்கும்." இவ்வாறு கூறினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?