Politics
விரக்தியின் வெளிப்பாடாக தான் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசி வருகிறார்-திருமாவளவன் எம்.பி!
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
"தொகுதிகளின் நலனுக்காகவும் தமிழகத்தின் நலனுக்காகவும் இந்தியா பாதுகாப்பு, இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு, மதசார்பின்மை, ஜனநாயகத்தின் பாதுகாக்கவும் நாடாளுமன்றத்தில் எங்களால் இயன்ற அளவில் அழுத்தமாக குரல் கொடுப்போம். அனைத்து தரப்பு விளிம்பு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பது தான் பெரும் சவாலாக உள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழகம் பாலைவனம் ஆகும் நிலையை ஏற்படுத்தும் வகையில் காவிரி உள்பட ஆற்று நீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆற்றுநீர் சிக்கலை தீர்க்க குரல் கொடுப்போம்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வலியுறுத்துவோம். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வி கொள்கையை காவி மையமாக்கும் முயற்சியில் அரசு ஈடுப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய கல்வி கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம், விரும்புகின்ற சனாதன கலாச்சார திணிப்பு முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில் குரல் கொடுப்போம்.
கூடங்குளம் அணு கழிவுகளை அதன் வளாகத்திலேயே அமைக்கின்ற முயற்சி அதிர்ச்சியை தருகிறது. கூடுதலாக அணு உலைகளை திறக்க கூடாது. இயங்கின்ற அணு அலைகளை மூட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
பிரதமரை சந்தித்த முதலமைச்சர் தமிழக பிரச்சனைகள் குறித்து மனு தந்ததாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் பற்றி தான் பிரதமரிடம் பேசியதாகவும் தமிழக பிரச்சனைகள் பற்றி பேசியதாக தெரியவில்லை. அது கண்துடைப்பு என்று விமர்சனங்களும் எழுந்து உள்ளன. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் தலையீடு இருப்பதால் தான் அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினை வெடித்து உள்ளது. இரட்டை தலைமை என்பதை டெல்லியின் தலைமை, தமிழக தலைமை என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அதிமுகவை மோடியும் தலைமை தாங்குகிறார் என்பதை மறைமுகமாக சொல்லுகிற செய்தி என நம்புகிறேன். அதிமுகவும், தமிழக அதிமுக அரசும் சுதந்திரமாக இயங்க வேண்டும். மத்திய அரசின் தலையீடுகளை அதிமுக தொண்டர்கள் முறியடிக்கப்பட வேண்டும்.
ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடந்ததால் நல்லது தான். தேர்தல் செலவுகள் மிச்சமாகும். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியமானது என தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலங்களில் கால இடைவேளை உள்ளது. இதை எப்படி சீர் செய்ய முடியும் என்று தெரியவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் சொத்துக்களை வெற்றி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேட்டதற்கு, தமிழகத்தில் காலுன்ற முடியாததால் பா.ஜ.க. கட்சி மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாக தான் பொன்.ராதாகிருஷ்ணன் இது போன்ற கருத்துக்களை சொல்கிறார். மத்தியில் பா.ஜ.க. அரசு இருக்காது. நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்ற முடிவை எடுத்தால் தமிழகத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பிக்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆளும்கட்சியாக உள்ள பா.ஜ.க. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் தான் ஆட்சியை நடத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. வாக்களிக்காத மாநிலங்கள், வெற்றி பெற முடியாத மாநிலங்கள் எல்லாம் இந்தியாவில் இல்லை என்ற உணர்வு பா.ஜ.க.விற்கு ஏற்பட்டு உள்ளதன் முலம் தேசத்தை எப்படி நேசிக்கிறார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!