Politics
பொன்.ராதாகிஷ்ணன் "கோடை வெயிலில் குழம்பி போய் உள்ளார்" : கே.பாலகிஷ்ணன் சாடல் !
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் 37 எம்.பி.,க்களும் தங்களது சொத்தை விற்றாவது விவசாயக் கடன், கல்விக் கடனை அடைக்க வேண்டும்” என்று அவர் கூறினார். அவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சி முடிவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"நாட்டில் பிரச்சனைகள் தலைமேல் உள்ளது. குடிநீர் தொடர்பாக அரசின் நடவடிக்கை தோல்வியை காட்டுகிறது .
மேலும் இந்திய - இலங்கை அரசுகள் இரு நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் என்று முழுங்கினார்கள். ஆனால் பெயரளவில் மட்டுமே அதை நடைமுறை படுகிறார்கள். தெடர்ந்து மீனவர்களை வஞ்சிக்கும் இந்த போக்கினை அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பேசிய அவர்,"தேர்தலின் போது காட்சிகள் அனைவரும் வாக்குறுதிகள் அளிப்பார்கள். அந்த வாக்குறுதிகளை தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்.
அதற்காக வெற்றியடைந்தவர்கள் தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்று வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாதமே அபத்தமானது. எதிர்கட்சிகள் கொடுக்கவேண்டும் என்றால் பிறகு அரசு என்ன செய்யும்? என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், இந்த வெயில் காலம் வந்ததும் பலர் குழப்ப மனநிலையை அடைந்து விடுகிறார்கள். அதே போலத்தான் பொன்.ராதாகிஷ்ணனும் கோடை வெயிலினால் குழம்பி போய் உள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் பற்றி அவர் கூறுவது தேவையற்ற கருத்து என்றும் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளர்.
முன்னதாக பொன்.ராதாகிஷ்ணன் கருத்துக்கு வடசென்னை தொகுதி தி.மு.க மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி,"முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோல்வி அடைந்த விரத்தியில் 37 எம்.பி.,களை இவ்வாறு நையாண்டி செய்யும் விதமாக பேசி வருகிறார். என்று கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!