Politics
உச்சகட்டத்தை எட்டியது அ.தி.மு.கவின் உட்கட்சி பூசல் | கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்!
அ.தி.மு.கவில் உள்ள இரட்டை தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மதுரை வடக்குத்தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி உயர்த்தினர். அ.தி.மு.கவின் குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.
இவற்றையெல்லாம் விட, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால் தான் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அ.தி.மு.கவின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரின் பேச்சின் மூலம் அக்கட்சியின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது உறுதியானது.
ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடிக்கு எழுந்த ஆதரவை அடுத்து, கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்றையக் கூட்டத்தை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம், இரட்டை தலைமைக்கு போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!